நாய் பயிற்றுநர் மஸ்னா முகமட் யூசோப், ஜோகூர் ஒய்வுத் தல உரிமையாளர் சையட் அகமட் அல்காப் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் போன்ற சம்பவங்களினால் சில தரப்புக்கள் சொல்வதைப் போல மலேசியா முஸ்லிம் பழமைவாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா ?
புத்ராஜெயாவில் இன்று நிருபர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட அந்தக் கேள்விக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த பதில்: “அதில் பழமைவாதம் என்ற கேள்வியே எழவில்லை. மலேசிய மக்களிடையே சில உணர்வுகள் காணப்படுகின்றன. அது முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. முஸ்லிம் அல்லாதாரும் உணர்வுகளைக் கொண்டுள்ளனர்.”
“ஒவ்வொரு சமூகத்தின் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்வது முக்கியமாகும். ஒவ்வொரு சமூகத்தின் உணர்வுகளையும் மதிப்பதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.”
நஜிப் இன்று பிரதமர் துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
புத்த பிக்குகள் என்றாலே சைவ உணவு உண்பவர்கள். அது ஒரு புறம். அமைதியான தியானம் செய்தார்கள் – அங்கே அவர்கள் தியானம் செய்ததற்காகவே ஆவேசம் , கொந்தளிப்பு, உலகமே இருண்டு போனது, அதற்காக கட்டடம் உடைபடும் என்ற ஆர்பாட்டம் ; ஆண்டாண்டு காலம் எங்கள் பாட்டன் காலம் தொட்டு நாங்கள் வழிபட்டுவந்த கோவிலை எங்கள் கண்முன்னாலேயே செருப்பு காலால் எட்டி உதைத்து , இடித்து தரை மட்டமாகும் போது எங்கள் இதயம் எந்த அளவிற்கு ரணவேதனை பட்டிருக்கும்? பிதமரே அறிவீர்களா ?