எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் மனிதர்: இது வரமா? சாபமா?

man_smile_002மனித உடலில் மூளை தான் எல்லா இயக்கங்களுக்கும், உணர்வுகளுக்கும் காரணமாக உள்ளது.

இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மனிதனின் செயல்பாட்டிலும் அதன் விளைவுகள் தெரியும்.

சில சமயங்களில் இவ்வாறான பாதிப்புகள் விபரீதமான மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.

இப்படியான ஒரு மாற்றத்திற்கு ஆளாகி சிக்கித் தவிக்கிறார் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மால்கம் மியாட்(வயது 63).

இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக மூளையின் பெரும் பகுதியில் பாதிப்பு உண்டாது.

இதனால் சோகம், துயரம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மையை இழந்து விட்டார்.

இதனால் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆனால் துக்கம் ஏதும் நேர்ந்த போதும் மியாட் மகிழ்ச்சியாக இருப்பது மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது.