சுவிட்சர்லாந்தில் திருடன் ஒருவனை பொலிசார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள கடிகார கடை ஒன்றில் ஜுலை 3ம் திகதி இரண்டு ரோமானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவரை பொலிசார் மிகவும் கொடூரமான முறையில் அடித்துள்ளனர், மேலும் அவனது கைகளை கட்டிவிட்டு தரையில் தள்ளி அவனுடைய தலையை பல முறை எட்டி உதைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அக்கடையில் உள்ள கமெரா ஒன்றில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ அந்நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது மனித உரிமைக்கு மீறிய செயலாகும் என்று பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இது குறித்து கமிஷனர் ஜர்க் சொல்பெர்கர்(துüசப ளுழடடடிநசபநச) கூறுகையில், ஒரு திருடனிடம் பொலிசார் இவ்வாறு நடந்து கொண்ட விதமானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது வண்ணம் காவல்துறை நடந்துகொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.