பினாங்கு குயின் ஸ்திரிட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்துக்குள் திருடர்கள் புகுந்து அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்து நகைகளைக் களவாடிச் சென்றதாக ஆலய அதிகாரிகளில் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருடர்கள் பின்புற கம்பிக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள் எனப் புகார்தாரர் கூறினார்.
“பல தெய்வ உருவச் சிலைகளும் மேசைகளும் உடைக்கப்பட்டுள்ளன. நகைகளையும் காணவில்லை”, எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது . ஆனால், காணமல்போன நகைகள் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.
நிறைய இடங்களில் இது போன்று நடந்து கொண்டுதான் இருக்கின்றன… இதனை தவிர்க்கவே முடியாதா??
இந்த நாய்களை சுட்டுத் தள்ள வேண்டும்
இப்ப கோவில்க்களுக்கும் ஆயுதம் ஏந்திய
காவலர்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறார்கள்
இம்மாதிரியான எடுப்பட்ட திருட்டு இரண்டு கால் நாய்களுக்கு .
சிலாங்கூரிலுள்ள ஆலயங்களிலும் இதேபோல் இவ்வாண்டு தொடக்கத்தில் தொடர்ச்சியாக திருட்டுகள் நடந்தன. செய்தவர்கள் யார் என்று பார்த்தால் அனைவரும் நமது இன இளைஞர்கள்தான். மற்ற இனத்துக்காரன் இதைச் செய்திருந்தால் இந்து மதத்ததை அழித்து விட்டான்கள் என்று கூப்பாடு போட்டிருப்போம். நமது இனத்துக்காரன்தானே கோயிலை உடைத்தால என்ன சிலையை உடைத்தால் என்ன என்று பேசாமல் இருந்து விட்டோம். கடவுளுக்கே பயப்படாத இத்தகைய பஞ்சமாபாதகர்களை நாமும் கண்டிக்க மாட்டோம். மற்றவன் கண்டித்தால் எங்கள் இனத்தை அழிக்கிறான் என்று ஒப்பாரி வைப்போம்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது? நம்மவர்களுக்கு தெய்வ பக்தி அபரிமிதமாக செயல்பட்டு கோவணம் இல்லாமல் நடுதெருவில் தலைதெறிக்க ஓடுது. இதை செய்பவன் வெறும் அம்புதான். இதை செய்வதற்கு காரணமானவர்கள் அவனை பெற்றவர்களே. சீரான வழியில் வளர்த்திருந்தால் நல்ல புத்தி இருந்திருக்குமே?
தன்னை காப்பாற்றி கொள்ள தமிழன் …… பவர் போதவில்லை.
எப்பொழுது அறிவுக்கு வேலை கொடுப்பீர்?.இதை எல்லாம் விட நமது தமிழ் பள்ளி ,தமிழ் கல்விக்கு அக்கறை செலுத்தினால் நன்று. கோவில் தேவை இல்லை என்று கூறவில்லை ,அது கொள்ளையர்களின் கூடாரமாக இருக்க கூடாதென்று தான் வலியுறுத்துகிறோம் .