அரசாங்கத்தில் இருப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகத்தின் தலைவர் என்னும் முறையில் அக்கறையில்லாத பார்வையாளராக மட்டும் தாம் இருக்க முடியாது என மலேசிய ஹிண்டராப் சங்கத் தலைவர் பி வேதமூர்த்தி சொல்கிறார்.
அரசாங்கம் வகுத்த பாதையில் வேதமூர்த்தி செல்ல வேண்டும் என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளதற்கு பிரதமர் துறை துணை அமைச்சருமான அவர் பதில் அளித்தார்.
ஸாஹிட் ஹமிடி தமது எண்ணங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.
“அடித்தட்டு மக்களுடைய உண்மையான உணர்வுகளை நான் எடுத்துச் சொல்வது அரசாங்கத்துக்குச் சாதகமான விஷயமாகும். நல்ல அரசாங்க ஆளுமைக்கும் குறிக்கோளுக்கும் நான் ஆக்கப்பூர்வமாக பங்காற்ற அது உதவுகின்றது,” என வேதமூர்த்தி இன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேதமூர்த்தி அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றைப் போல செயல்படக் கூடாது என்றும் அரசாங்கக் கொள்கைக்கு முரணான அறிக்கைகளை விடக் கூடாது என்றும் ஸாஹிட் அண்மையில் அவரைச் சாடியிருந்தார்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உமது கடமையை நன்றாகச் செய். உண்மைக்கும் நேர்மைக்கும் அழிவு இல்லை….
ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை….ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை…
இது அம்னோ வீசும் எலும்புக்கு அலையும் நாய்களுக்கு நன்றாக உறைக்கட்டும்…
வாயை திறக்காமல் இருபதற்குதான் ,உங்களுக்கு துணை அமைச்சர் பதவி ,அதை விடுத்து தேவை இல்லாமல் வாயை திறந்தால் ,இப்படி வாங்கி கட்டிக்க வேண்டியதுதான் .எதற்கு இந்த மானம் கேட்ட பொலப்பு ,அங்கதான் மானமும் மரியாதையும் இல்லனுன் தெரிஞ்சி போச்சி ,இந்த விசியத்துக்கு இப்படி மூடிக்கிட்டு இருக்க சொல்லும் அம்னோ அரசாங்கம் ,நாளைக்கு உனக்கு புடிச்சா இங்க இரு இல்லையா கலம்புனு சொல்லுவதற்கு முன்பு விலகி கொள்வதுதான் நல்லது .
திரு. வேதா அவர்களே. இது சத்திய சோதனைக் காலகட்டம். சமுதாயத்திற்காக வாதாடாமல் சொந்த நலன்களை மட்டும் கவனித்ததால்தான் ம.இ.கா கூடாரம் காலியாகிவிட்டது. உங்களுக்கு ஆதரவு பெருகியது. நீங்களும் தடம் மாரிச் சென்றுவிட்டீர்கள் என கருதுவதற்கு இந்த பதவி இடமளித்தது. பதவியா சமுதாயமா என நிரூபிப்பதற்கு இதுவே தருணம். அவர் வெளிப்படையாக இப்படி சவால் அறிக்கை விட்டதும் நல்லதுக்கே.
ஐயா, இந்திய இளைஞர்கள் சொந்த இனத்தினரை வெட்டியும் சுட்டும் கொன்று கொண்டு இருந்த போது நீர் என்ன செய்தீர்? நம்மினத்துக்காரன் சொந்த இனத்தைச் சேர்ந்த ஆயிரம் பேரையும் வெட்டிச் சாய்க்கலாம், ரோட்டில் செல்பவனை, வியாபாரம் செய்பவனை அடித்து பணம் பறிக்கலாம், தெருவில் குடித்து விட்டு ஆட்டம் போடலாம் . ஏண்ட நாயே இப்படி செய்கிறீர்கள் என்று அவர்களை தட்டிக் கேட்கமாட்டீர்கள். குடிப்பழக்கத்தை,ரவுடித்தனத்தை விடச் சொல்லி நமது இளைஞர்களுக்கு என்றாவது அறிவுரை கூறியுள்ளீர்களா? இதில் எதையும் செய்யாமல் இந்திய சமுதாயத்தின் பேரைச் சொல்லி மந்திரி பதவி வாங்கிக் கொள்வீர்கள் வெட்கமே இல்லாமல்
அரசாங்கத்தில் ஓரளவுக்கு துணிந்து குரல் கொடுக்க ஒருவர் இருக்கிறாரே என திருப்தி கொள்வோம். அதைவிடுத்து அவரை குறை சொல்லிக் கொண்டிருப்பதால், எந்தப் பயனும் விலையப் போவதில்லை
எல்லாம் வெளி வேஷம். நம்மவர்களில் எட்டப்பனுக்கா பஞ்சம்?
நீங்கள் அந்த பதவியை ராஜினாமா செய்தால்தான் உங்களை நம்புவேன்.செயல் பட முடியாத உங்களுக்கு எதுக்கு மந்திரி பதவி?
திரு வேதா மலிவு விலை சாராயம் ஏற்படுத்தும் சமூக சீரழிவிற்கு குரல் கொடுக்க வேண்டும்
புரட்சி சார், மலிவு விலை சரக்கு மட்டுமல்ல, விலை உயர்ந்த சரக்கும் சமூக சீரழிவிற்கு காரணமாக உள்ளது. கோவில் திருவிழா முதற்கொண்டு, கல்யாணம், கருமாதி, பிறந்த நாள் விழா, என்று நாள் தவறாமல் எதாவது ஒரு காரணத்திற்காக நாட்டில் விற்கப்படும் எல்லா வகை சாராய வகைகளுக்கும் நம்மவர்தான் இலவசமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நம் இனம் எல்லா வகையிலும் கேவலாமகதான் செயல் படுகிறார்கள். 75% இளைஞர்கள் மது மற்றும் பல வகை போதைகள் அடிமையாகிவிட்டர்கள் . மதுவும் மற்றும் போதைகள் அறிந்துவிட்டுத்தான் தைபூசதிர்க்கும் கோவில் திருவிழவிக்கும் வருகிறார்கள். இது உண்மை நான் பல முறை பார்த்துள்ளேன் . மிகவும் அடாவடிதனமாகவும் காட்டுமிராண்டிகளாகவும் நடந்து கொள்கிரால்கள். இவர்களின் பெற்றோர்கள் என்ன சொல்லி வளர்த்தார்கள் அல்லது இவர்கள் எந்த சுற்று சூழலில் வாழ்கிறோம் என்று அறியாமல் ஆணவத்தோடு இருகிறார்களா? இதற்க்கெல்லாம் எப்பொழுது ஒரு நல்ல முடிவு நல்ல வழி உருவாக்குவது…..?
இங்கு எனக்கு ஒன்று மட்டும் தெரிய வில்லை ,அரசியல் விளம்பரத்திற்கு அல்லது அரசியல் ஆதரவுக்கு ரவுடிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்பது போல் இருக்கிறது .முன்பு உதயகுமாரும் .வேதாவும் எங்காவது ரவுடிகள் சுட்டு கொள்ளபட்டலோ அல்லது கைது செய்து உள்ளே வைத்து இருந்தாலோ வரிந்து கட்டி கொண்டு வக்காலத்து வாங்குவதற்கு முதலில் நிற்பார்கள் ,அதுவே அந்த ரவுடிகளால் பாதிக்க பட்ட அப்பாவி மக்களுக்கு இவர்களின் பார்வை படுவதற்கு இல்லை ,எதோ பெரிய தேச தலைவருக்கு ஞாயம் கேட்பதற்கு பொங்கி எழுந்தது போல் இருக்கும் இவர்களின் நடவடிக்கை ,இவர்களின் ஆட்டம் அடங்கிய பிறகு எதிர்கட்சியில் இருக்கும் சில இந்திய தலைவர்கள் இதையே பின்பற்ற தொடங்கி வருவது ,அரசியலில் தொடர்ந்து செயல் பட ரவுடிகளின் ஆதரவு தேவை என்பது போல் இருக்கிறது ,காரணம் நாளைக்கு போலிஸ் கை கொடுக்க வில்லை என்றால் ரவுடிகளை வைத்து காரியத்தை முடித்து கொள்ளலாம் என்ற என்னமோ என்பது புரியாத புதிர் .ரவுடிகளால் பாதிக்க பட்ட மக்களின் துயரத்தில் பங்கு கொள்ள மறுக்கும் அரசியல்வாதிகள் ,குண்டர்களிடம் இருந்து எதோ ஒன்றை எதிர்பார்கிறார்கள் என்பது புரிகிறது .
75 % இளைஞர்கள் வீணாப் போனவர்கள் என்பது அபத்தம்…ஆய்வு தெரியாமல் லோகநாதன் இனத்தை அசிங்கப் படுத்தலாகாது.
மாரியம்மன் கோவிலில் பேடிகள் தனம், ம இ காவில் பேடிகள், அம்னோவில் பேடிகள் பிஎன்னில் பேடிகள், பிகெஆரில் பேடிகள், எல்லாரையும் வளர்ப்பது தலைகள்.. இளைஞர்கள் வறுமையின் வேட்டைகள். குடும்பம் அல்ல!
நன்றி வேதா! நீங்கள் செயல் வீரராக இருக்க வேண்டும் என்பதே எங்களது ஆவல்! தொடருங்கள் உங்கள் பணியை!
திரு வேதமூர்த்தி அவர்களே உண்மையில் உங்களுக்கு இந்த சமூகமீது அக்கறை இருந்தால் தினந்தோறும் குண்டர் கும்பலினால் அவதிப்பட்டும்,பாதிக்கப்பட்டும், உறக்கத்தில் கூட பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சமூகத்துக்கு உங்களால் என்ன செய்ய முடியும்.????????? மீண்டும் மாண்டோர் கதைதான் அதுவும் எங்களுக்கு தெரியும்.உங்களைச்சொல்லி ஒன்னும் குற்றமில்லை.
ஆனால் தயவு செய்து இப்போதைக்கு உங்கள் வாயை கொஞ்சம் கட்டி வையுங்கள்.இப்போதுதான் போலீசார் இந்த குப்பைகளை அகற்ற ஒரு நல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.முடிந்தால் போலிசுக்கு துணை நில்லுங்கள் இல்லையேல் தள்ளி நில்லுங்கள்.
இந்த கும்பல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை நேரில் சென்று பாருங்கள் ஐயா.பல ஆண்டுகள் குருவி போல் சேகரித்த பொருள்கள்,பணம், நகைகள் இவைகளை ஒரே நாளில் கொள்ளை அடித்ததோடு நில்லாமல்,எத்தனை உயிர்கள் பலியாக்கபட்டன.
கொலை கொள்ளையோடு நிறுத்தாமல் பெற்றோர்,அண்ணன் தம்பி,பிள்ளைகள் முன்னே பெண்கள் கற்பழிப்பு. கணவன் முன்னே மனைவி மார்கள் கற்பழிப்பு.
வட்டி முதலைகள் வாங்கிய பணத்திற்கு பதிலாக அக்குடும்பத்தின் பெண் பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடு படுத்தியது.
பொது இடங்களில் இந்த குண்டர் நாகரீகமற்ற செயல்கள்.
இவை அனைத்தையும் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.காரணம் இந்த சம்பவங்கள் அனைத்தும் நாளிதழ்களில் வந்த செய்திகள் பாதி,மீதி பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் வெளியே சொல்ல முடியாத வேதனளைகளாக உள்ளன.
இவை அனைத்தையும் செய்தவர்கள் வெளிநாட்டுக் காரனோ,அல்லது இந்த நாட்டில் வாழும் வேற்று இனத்தவனோ அல்ல.இதே இனத்தில் பிறந்து இன்று குண்டர் கும்பைளில் இருப்பதை ஒரு கௌரவமாக கருதும் இந்த மனித மிருகங்கள்தான்.
இப்போதைய நிலைக்கு இந்த சமூகத்தின் மானமும் கௌரவமும் காக்கப் பட வேண்டுமெனில் இந்த குண்டர் கும்பல்கள் அழிக்கப்பட்டே ஆக வேண்டும்.அவன் யாராக இருந்தால் என்ன? எந்த இனமாக இருந்தாலும் என்ன? குப்பை குபைதான்,
மா இ கா போல இல்லாமல் அரசாங்கத்தில் இருந்து இந்தியர்களுக்கு நல்லதும் வசதியும் செய்யத்தான் நீங்கள் பதவி ஏற்று கொண்டீர்கள்.உங்கள் கடமையை செய்யுங்கள்.இதுநாள் வரை இந்த அரசு இந்தியர்களை எப்படி கையாண்டார்கள்,இனி என்ன எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை நீங்கள் தான் கவனித்து சொல்லப்போகிறீர்கள்.
ஒருகாள் அவர்களின் இது போன்று தவறுகளை சுட்டி காண்பிக்கும் பட்சத்தில் உங்களை விரட்ட பார்தாலும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரவும், இந்த அரசின் நேர்மையை வெளிபடுத்தவும் வாய்ப்பு உள்ளது.
மக்கள் உங்கள் பக்கம்