தண்டா புத்ரா திரைப்படத்தில் கொடிக்கம்பம் ஒன்றின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர் கழிக்கும் காட்சியை தாம் சேர்த்ததற்கான காரணத்தை விளக்க அதன் இயக்குநர் ஷுஹாய்மி பாபா மறுத்துள்ளார்.
மலேசியாகினி அந்தத் திரைப்படத்தை இன்னும் பார்க்காததே விளக்கமளிக்க மறுப்பதற்குக் காரணம் எனப் பல பட விருதுகளைப் பெற்றுள்ள அவர் சொன்னார்
உணர்வைத் தூண்டுவதாகவும் வரலாற்று ரீதியில் தவறானதாகவும் சிலர் கருதும் அந்தக் காட்சியை அவர் ஏன் சேர்த்தார் என வினவப்பட்ட போது,” நீங்கள் சொல்வது தான். நீங்கள் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நீங்கள் அந்தப் படத்தைப் பாருங்கள்,” என ஷுஹாய்மி சொன்னார்.
“நீங்கள் உணர்வுகளைத் தூண்டும் விஷயத்தை எழுதியுள்ளீர்கள். நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அது தான் நியாயம்.”
‘தண்டா புத்ரா’ கடந்த செவ்வாய்க் கிழமை ஊடகங்களுக்கு திரையிடப்பட்டது. ஆனால் மலேசியாகினி செய்தி இணையத் தளம் அழைக்கப்படாததால் அதில் கலந்து கொள்ளவில்லை.
அப்படி என்றால் காட்சி பற்றி விளக்க தயாரா ,,,
அலையாத வாசல் மிதியாதே என்ற பழமொழி நினைத்து மலேசியாகினி அதில் கலந்து கொள்ளவில்லை.பிறகு ஷுஹாய்மி என்ன சொல்ல வருகிறார்?
அழையாத வாசல் மிதியாதே என்ற பழமொழி நினைத்து மலேசியாகினி அதில் கலந்து கொள்ளவில்லை.பிறகு ஷுஹாய்மி என்ன சொல்ல வருகிறார்?