இரசாயன குண்டுத் தாக்குதல்! சிரியாவை தாக்க தயார் நிலையில் பிரான்ஸ்

syria_chemical1சிரியாவில் போர் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டை தாக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு படைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி அசாத் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் இராணுவம் இரசாயன குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது.

மேலும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானங்கள் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.

இதே போன்று பிரிட்டனும் மத்திய தரைக்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சர், அப்பாவி மக்கள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.