பண்டார் சன்வே-இல், ரிட்சுவான் கொண்டோமினிய உரிமையாளர்கள், ‘ஆப்ரிக்கர்களு’க்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை என்றும் அங்கு ஏற்கனவே குடியிருப்போரை மூன்று மாதங்களில் வெளியேற்றுவது என்றும் முடிவு செய்திருப்பது “சரியல்ல” என்று நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார்.
“வாடகைக்குக் குடியிருப்போருடன் பிரச்னை என்றால் அதற்கு அவரது இனப்பின்னணிதான் காரணம் என முடிவு செய்வது சரியல்ல.
“எல்லா ஆப்ரிக்கர்களுமே தொல்லை கொடுப்பவர்கள் என்பது நியாயமல்ல”, என்றாரவர்.
அட இப்பதான் உங்களுக்கு தெரியுமா 1984 இல் நானும் என் நண்பரும்
untuk disewa என்ற தொலைபேசிக்கு அழைத்தோம் மறுமுனையில் ஒரு மலாய்க்காரர், ini rumah saya mahu sewa, அவர் உடனே rumah ini saya tak boleh sewa untuk orang keling….என்று பதில் அளித்தார்.[அப்பொழுது கை தொலைபேசி இல்லை விட்டுதொலைபேசி அல்லது பொதுதொலைபேசி மூலம் தான்
அழைக்கவேண்டும்]
ஐயா சாமுண்டி, இதெல்லாம் இந்த மடயனுங்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல இருப்பான். இப்பொழுது கூட என் நண்பர் ஜோகூர் மாநிலத்துக்கு வேலை மாற்றல் ஆகி போனார். அவர் இந்தியன் என்பதனால் வாடகைக்கு விடு கொடுக்க மறுக்கிறார்கல். சொந்தப் பிள்ளையின் பிரச்னையை பார்க்க முடியலே ஊரான் பிரச்னைக்கு வரிந்து கட்டுகிறான்.