மஇகா, எல்லா இந்தியர் கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆயத்தமாக உள்ளது. ஆனால், கட்சியைக் கலைத்துவிட்டு இந்தியர்களுக்காக புதுக் கட்சி அமைப்பதில் அதற்கு உடன்பாடில்லை.
இதனை வலியுறுத்திய அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சிகளில் மஇகா அதன் அடையாளத்தை இழப்பது முறையாகாது என்றார்.
பாரிசான் நேசனலில் (பிஎன்) உள்ள இந்தியர் கட்சிகள், இந்தியர்களின் நலன்கருதி ஒன்றிணைவது நல்லது என்ற கருத்தை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் ஞாயிற்றுக்கிழமை முன்மொழிந்திருந்தார்.
இருக்கும் நாற்காலி போய்விடுமே!!! சமுதாய முன்னேற்றத்தை பற்றி யாருக்கும் கவலை இல்லை. அப்படியே அது நடந்தாலும், அம்னோவிடம் இருந்து எந்த மாற்றமும் இருக்காது. இந்தியர் கட்சிகள் அம்னோவின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட்டால் தான் விடிவு காலம்.
உருப்பட்ட மாதிரிதான் நமது தமிழினம் .பண்பும் பணிவும் இல்லாத தலைவர்களால் நமக்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்ய தலைவர்களால் ஆகாது . மக்கள் சிந்தித்து செயல் பட்டாலே போதும். இன்னொரு கட்சியா ஒருங்கிணைக்க நம் இனத்தை . தனி மனிதன் உயர்வுதான் சமுதாய உயர்வு . ஒவ்வொருவரும் உயர்ந்திட உறுதி கொள்வோம் . வீட்டையும் உறவையும் நெர்செய்வோம் வாரீர் .ஆண்ட பரம்பரை நாம், அடிமை ஆக வேண்டாம் அரசியலால் .
ம,இ,காவில் எப்போது டாதுக் சிறி உதாமா சாமி வேலு கால் அடி எடுத்து வைத்தாரோ அப்போதே அது அவருடைய குடும்ப சொத்தாகி விட்டது.இனி அடுத்து இந்த ம,இ,காவை அவரது அடுத்த வாரிசுகளான டாதுக் சரவணன்,வேல்பாரி,வீரசிங்கம் இவர்கள் ஆட்சி செய்யப்போவது அனைவருக்கும் வெளிச்சமே. ம,இ,கா அதன் சுயப்பாட்டை ஐயா துன் சம்பந்தன் காலத்தோடு முடித்
துக்கொண்டது இப்போது எல்லாம் கட்சி என்றால் காசு,பணம்,துட்டு
MONEY மோனே. இங்கே எங்க இருக்கு கட்சியும் சேவையும்.அதுக்கு நேரமும் இவர்களுக்கு இல்லை,அதற்கு சரியான ஆளும் ம,இ,காவில் இல்லை.எல்லாமே ஆதாய உலகம்.
இந்தியர்களை பி என் அரசாங்கம் நடத்தும் லச்சனம்தான் நன்றாக தெரிகிறதே!!!
இன்னும் எல்லா இந்திய கட்சிகளையும் இணைத்து பி என்னின் கீழ் அடிமை போல வாழப்போகிறீர்களா????
தமிழ் அழிகிறது.. இந்தியர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு பறிக்கப்படுகிறது….அந்நியர்கள் போல் அம்னோவிடம் கையேந்த வேண்டியுள்ளது….இதெல்லாம் இந்த மண்ணில் பிறந்த நமக்கு தேவைதானா????
இன்னும் எவ்வளவு காலம் பிறந்த மண்ணில் அடிமை போல் வாழ்க்கை????
இங்கேயும் கொஞ்சம் கவனித்தீர்களா ? BN யில் உள்ள இந்திய உறுப்பு கட்சிகள் மட்டும் ஒன்றிணைவது நல்லது ! அப்படிஎன்றால் BN யிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளுக்கு …”சங்கு” ! சம்பந்தன் ஒரு புறம் முழக்கமிடுகிறார் , மதியழகன் ஒருபுறம் கர்ச்சிக்கிறார் அனால் இவர்களின் ஆதரவு , அர்பணிப்பு எல்லாம் தேவை படுவது, ஓட்டுக்கு மட்டும்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார் அட்னான் !