அமைச்சர்களின் வற்புறுத்தலால் பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி (இடம்) பதவி விலக மாட்டார் என இண்ட்ராப் மலேசியாவின் ஆலோசகர் என்.கணேசன் கூறினார்.
“வேதா, பதவி விலகப்போவதில்லை. அவருக்கென்று ஒரு இலட்சியம் உண்டு (பொதுத் தேர்தலுக்குமுன் பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அவர் தொடர்ந்து முயல்வார்.
“அதற்காகத்தான் அவர் அரசாங்கத்தில் இருக்கிறார்”.
அரசாங்கத்தின் மூலமாக இந்தியர்களின் உயர்வுக்கான இண்ட்ராபின் ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் போனால் மட்டுமே வேதமூர்த்தி பதவி விலகுவார் என்றவர் சொன்னார்.
UMNO மந்திரிகளுக்கு வேதமூர்த்தி ஒரு கரடி பிம்பம் போல் காட்சி தருகிறார் ! எதுக்குடா இந்த பூரானை காதுக்குள் விட்டோம், ஐயோ !! கொடையுதே !!! என்று அவஸ்தை படுகிறார்கள். படட்டும் , வேத சும்மா இருந்தாலே போதும் , அவனுங்க கபாலம் தாளம் போடுது !!
என்னடா உங்கள் விருப்பதிற்கு வருவதற்கும் போவதற்கும் வேதா என்ன எடுப்பார் கைபிள்ளையா? இல்லை அவர் உங்கள் பேச்சை கேட்டு அதற்கு தாளம் போடும் மரியாதை கெட்ட ம இ கா வா? அதன் தலைவரா? அவர் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் இருந்து எள்ளளவும் அவர் விலகவில்லை. மிகவும் உறுதியாய் இருகின்றார். அசைத்து பாருங்கள் அசந்து போவீர்கள். அல்லது பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். பிரதமருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து முதலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திரு வேதமூர்த்தி அவர்களே பத்திரிக்கை விளம்பரத்தை விடுத்து ஆக்கபூர்வமான செயலுக்கு வடிவம் தாருங்கள் அதே நேரத்தில் குண்டர் கும்பலுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்தி விடுங்கள்,இல்லையேல் மலேசியா இந்திய சமுகம் மற்ற அரசியல் வாதிகளை ஓரங்க கட்டியது போல் தங்களையும் ஓரங் கட்ட நேரிடும் காரணம் அதிகமான மக்கள் குண்டர் கும்பல்களினால் பாட்டிக்கப் பட்டு அவர்கள் மேல் மிகுந்த கோபமுடன் இருக்கின்றனர்.
எதிரொலி அன்பருக்கு நன்றி. போலீசார் குண்டர்களாலும், வழிப்பறி கொள்ளையர்களாலும், திருடர்களாலும் பாதிக்கப்பட்டவர்களை பேட்டிகண்டு அவர்களின் மனநிலை அந்தநேரம் எப்படி இருந்தது, எப்படி, எவ்வளவு காலம் அல்லது மாதங்கள் அவர்கள் பயந்துபோய் வேலை ஏதும் செய்யமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்பதை தெளிவாக ஊடகங்கள் வழி(முகங்களை மறைத்து)வெளியிடவேண்டும்.
எதிரொலி மற்றும் சிந்தனை, அன்பர்களே… வேதா ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் வக்காலத்து வாங்கவில்லை. நிரபராதிகள் தண்டிக்க பட கூடாது என்றும் அதே நேரம் இளைஞர்கள் குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? அது மட்டுமில்லாமல் இந்தியர்களை மட்டும் குறி வைத்து கொள்வது சரியல்ல. வேதாவும் பேசாமல் போனால் பிறகு யார் பேசுவது? மற்ற அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் பேசினார் இப்போது தேர்தல் முடிந்து விட்டதால் அமைதியாகி விட்டனர். வேதா இன்றும் பேசுகிறார். முடிந்தால் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.
In order to safe this nation, umno (infested with scumbags) needs to be disarmed from their comfort zone.Otherwise nothing will work,they’ve been there too long-simple logic.
இப்ப பப்ளிக் பீல் ஹாப்பி வித் போலீஸ் ஷூட்டிங் , இந்தியன் தமிழ் யூத் திருந்தனும ,, வேலை இல்லையானு பொய் சொல்லாதே ..எதனை லச்சம் பாரின் வோர்கேர்ஸ் இங்க வண்டு வேலை பர்கிரங்க….இந்தியன் யூத் சீக்கிரம் பணம் கிடைக்கணும் ஈசியா கிடைக்கணும் ..அடுத்தவன் அளித்து நீ வாழணுமா…