பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-வது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரணமான “மாலிப்டினம்’ என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் கூறியதாவது:
மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம்
செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.
செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.
இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம். நல்லவேளை, நாமும் நமது மூதாதையர்கள் போல் செவ்வாய் கிரகத்திலேயே தங்கியிருந்தால், இப்படி உட்கார்ந்து இதைப்பற்றி பேசிக்
கொண்டிருந்திருக்க மாட்டோம் என்று பென்னர் தெரிவித்தார்.
அதாங்க மனுஷன செய்வாய் தோஷம் புடிச்சி ஆட்டுது ! நாசாவும் நம்பித்தான் ஆகவேண்டும் !