தெங் சாங் இயோ மீண்டும் மாநில பிஎன் தலைவராவதில் பினாங்கு அம்னோவுக்கு மறுப்பேதும் இல்லை, ஆனால் அவர் முதலில் மாநில கெராக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தெங், மாநில பிஎன்னின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார் என்று கூறிய பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், தெங் மாநில பிஎன் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அவருக்குப் பதிலாக வேறு எவரும் அப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தலுக்குப் பின் தெங்,அப்பதவியிலிருந்து விலகினார்.
“பிஎன் கூட்டணிக் கட்சிகளின் கட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னரே அது பற்றி விவாதிக்கப்படும்”, என சைனல் கூறினார்.