பெண்கள் உள்ளாடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உருவப் படத்தை சித்தரிக்கும் ஓவியங்களை, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காட்சிக்கு வைத்திருந்த காட்சியகத்தின் இயக்குநர் காவல்துறையினரால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் எவ்வித விளக்கமுமின்றி தான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டதாக அந்தக் காட்சியகத்தின் இயக்குநர் டட்யானா டிடோவா பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் ரஷ்ய அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் விதமாக தீட்டப்பட்டிருந்த ஓவியங்களை அந்தக் காட்சியகத்திலிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதில் ஒரு ஓவியத்தில் பெண்ணின் உடலில் புடினின் தலை இருப்பது போலவும், அவர் பெண்களின் உள்ளாடைகளை அணிந்திருப்பது போன்று காட்டும் பிரதமர் டிமிட்ரி மெட்வியடேவின் தலைமுடியை வருடுவது போல வரையப்பட்டிருந்தது.
அந்த ஓவியத்தை வரைந்த கொன்ஸ்ட்டாடின் அலுட்னின் நாட்டைவிட்டு வெளியேறு பிரான்ஸில் தஞ்சம் கோரியுள்ளார்.
ஓவியங்களை காட்சிக்கு வைத்த காட்சியகமும் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது. -BBC