சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா பகுதியில் சனிக்கிழமை மதியம் 2 விமானங்களை மொத்தம் 47 கி.மீ.தூரம் இயக்கினான். அதில் ஒரு விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி சாதனை படைத்துள்ளான்.
சிறுவன் இயக்கிய விமானத்தின் எடை 100 கிலோ. இதில் 2 இருக்கைகள் உள்ளன. சிறுவன் விமானத்தை இயக்கியபோது பயிற்சியாளர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
சிறுவன் டுவோடுவோ தனியார் கிளப் ஒன்றில் 20 நாட்கள் பயிற்சி பெற்றான். அந்த கிளப் பின் பொறுப்பாளர் ஜங் யோங்குய் கூறும்போது, சிறுவன் டுவோடுவோ விமானம் இயக்குவதை விடியோவில் பதிவு செய்து வைத்துள்ளோம். அதை நாங்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.