ஏ.சமட் சைட், அவரது தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டும் எனச் சில தரப்பினர் கூக்குரல் இடுவது பற்றிக் கவலையே படவில்லை.
“என் தேசிய இலக்கியவாதி பட்டத்தைப் பறிக்க வேண்டுமா, தாராளமாக நடக்கட்டும்”, என்றாரவர்.
அரசாங்கம் தம் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தால்கூட கவலை இல்லை என அந்த 81-வயது கவிஞர் குறிப்பிட்டார்.
எதையும் தாங்கும் இதயம் ! மனதில் உறுதி ! கவலையில்லாத மனிதன் ! புயலை கண்டு அஞ்சாத நெஞ்சம் இது – புழுதியை கண்டா ஓடிவிடும் !
ஆஹா! 81 வயது முதியவருக்கு கூட எங்கள் ஆட்சியின் மீது பயமில்லாமல் போய்விட்டதா? இரு, இரு இதுவரை இரண்டு C4 க்கள் மட்டுமே வெளியாக்கியுள்ளோம். அடுத்த குறி நீங்கள்தான். உங்களை நானே வந்து போட்டு தள்ளப்போகிறேன். என்னை பிடித்தவர்கள், முகத்தை மூடி, நீதிமன்றம் கொண்டு செல்வார்கள். வழக்கு வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும். முதலில் எனக்கு தூக்குத் தண்டனை என்பார்கள். பிறகு அப்பீல். அவ்வளவுதான். வெளியே வந்துவிடுவேன். சில காலங்களுக்கு ஆய், ஊய் என கத்துவேன். உண்ணாவிரதமும் இருப்பேன். பிறகென்ன? துணையமைச்சர் பதவிகள் என்னை தேடி வரும். இதுதான் எங்கள் அரசியல். புரியாவிட்டால் தலைமுடியை பிய்த்துக் கொள்ளுங்கள். தலையில் முடி இல்லையென்றால், தாடியை பிய்த்துக்கொள்ளுங்கள். நான் ஒரு முறை சொன்னால், ஒரு முறைதான்!
பழுத்த அனுபவசாலி. இவரே இப்படி சொல்லுகிறார் என்றால்? இந்த அரசாங்கம் எந்த லட்சணத்தில் உள்ளது என பார்த்துக் கொள்ளுங்கள்.
எதற்கும் அஞ்சாத இவரின் துணிச்சல் பாராட்டதக்கது..அரசாங்கம் எது சொன்னாலும் தலை ஆட்டி வெறும் பட்டம் கிடைத்தால் போதும் என்று பல இலக்கியவாதி இன்று இருப்பதை போல் இல்லாமல் நேர்மையுடனும் கொள்கையுடனும் வாழும் இந்த மாமனிதருக்கு நான் தலைவனுங்குகிறேன்..அரசாங்கம் மிரட்டினாலும் அடித்தாலும்,எங்களுக்கு அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே..!!!
இந்த பழுத்த கட்டயிடம் இவர்கள் ஜம்பம் பலிக்குமா??
சிங்கம் அவருக்கு c4 இருக்கிறதோ இல்லையோ.உங்களுக்கு அனுப்பி விடுவார்கள் ஜாக்கிரதை.உண்மையை பேசக்குடாது.
இவர் நல்ல மனிதர் ,சமுக நல போராட்டவாதி
வாழ்த்துக்கள் அய்யா,உங்களை எண்ணி பெருமை படுகிறேன்
கிழவர்களைக் கூட இந்த அம்னோக்காரர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கே! கிழவிகளே ஜாக்கிரதை!