சர்க்கரை வியாதியால் அதிகம் பாதிக்கப்பட்டோர் சீனாவில்தான் இருக்கிறார்கள் என்று புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
அந்நாட்டில், 11 கோடியே 40 லட்சம் பேருக்கு நீரழிவு நோய் இருப்பதாக அமெரிக்கன் மேடிகல் அசோசியேஷன் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சீனாவில் உள்ள வயது வந்தோர் ஜனத்தொகையில் 11.6 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த பாதிப்பு அமெரிக்காவை விட அதிகம்.
சீனாவில் மாறிவரும் உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறை மாற்றங்களுமே இந்த நோய் பரவலுக்கு முக்கியக் காரணம் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு பரவலாக உள்ளது. சமீப ஆண்டுகளில் அதிக நீரிழிவு நோயாளர்கள் கொண்டிருக்கும் நாடாக இந்தியா கணிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. -BBC