-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 6, 2013.
கம்போங் புவா பாலா மக்கள் குறைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி 12 பேர்களின் நம்பிக்கையயும், வாழ்வாதாரத்தையும் அழித்த இந்த ம.இ.காவின் இளைஞர் அணி தலைவர்கள் அன்று பினாங்கு மாநில பாக்காட்தான் அரசு செய்யவிருந்த சமரசத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனையை அரசியலாக்காமல் இருந்திருந்தால், இன்று அந்த ஒவ்வொருவரும் 10 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு அதிபதி ஆகியிருப்பார்கள். அப்பொழுது மன உளைச்சளுக்கு ஆளான அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் மரணமும் அடைந்திருக்க மாட்டார்.
அன்றைய பினாங்கு ம.இ.கா தலைவர் மறைந்த சுப்பையாவின் ஒப்புதலோடு அந்த 2.4 ஏக்கர் நிலம் அம்னோ சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் இந்தியர்களின் பாராம்பரிய நிலத்தையும் வாழ்க்கையயும் நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் ம.இ.கா வினற்கு ஏற்படவில்லை?
அன்று ம.இகாவின் பிரதிநிதி சிந்தித்து செயல்பட்டு அம்னோவின் வேண்டுதலுக்கு தலை சாய்க்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய ஆர்பாட்டத்தையும் கலேபரத்தையைம் ம.இ.காவின் இளைஞர் அணியினர் மேற்கொண்டிருக்க தேவையில்லாமல் போயிருக்கும் .
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும், துணை முதலமைச்சர் முனைவர் இராமசாமியும் அந்த நிலத்தை மீட்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், உச்சநீதிமன்றம் அந்த நிலத்தை புதிய உரிமையாளாருக்கு வழங்க வேண்டுமென்று தீர்ப்பு வாழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாக்காத்தான் அரசு 32 குடும்பத்தினற்கு தலா 1,200 சதுர அடி கொண்ட இரட்டை மாடி வீடுகளை இலவசாமக வழங்கி ஒரு சிறப்பான தீர்வைக் கண்டது. அதனைப் பெறவேண்டாம் என்று தவறான ஆலோசனகள் அவர்களுக்கு வழங்கி , வீணான சர்ச்சைகளை அரசியல் இலாபத்துக்காக ஏற்படுத்தியவர்கள் இந்த ம.இ.காவினர்.
அன்று பிரதமர் நஜிப் தலையிட்டு அவர்களுக்கு 2 லட்சம் வெள்ளி பெருமான வீட்டு மனைகளை செபெராங் ஜயாவில் பெற்றுத் தந்தார். அதைவிட அதிக மதிப்புள்ள வீடுகளை பாக்காதான் அரசாங்கம் வழங்கியும் அதை மறுத்த புவா புலா மக்கள் இன்று அந்த தவற்றை நினைத்து வேதனைப் படுவதைத் தவிற வேறு வழியில்லை. அந்த துரோகத்துக்கு ம.இ.காவினர் பொறுப் பேற்றுக் கொள்வார்களா?
அன்று அந்த 12 பேரும் என்னிடம் சட்ட ஆலோசனை கேட்க வந்த பொழுது, நானும் பினாங்கு மாநில அரசு சொன்ன யோசனைகளை ஏற்று ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு வீடுகளை பெற்றுக்கொள்ளும்படி ஆலோசனை கூறினேன்.
ஆனால் அவர்களோ ம.இகாவின் இளைஞர் அணி வற்புறுத்தலின் பேரிலும் தவறான ஆலோசனகளாலும் அப்படி செய்யாததினால் இன்று பெரிய சொத்துக்கு அதிபதியாகியிருக்கும் வாழ்ப்பை இழந்து நிற்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் ம.இகா இளஞர் அணியின் மோசமான சுயநல அரசியல்தான் என்பதை இப்பொழுது அந்த 12 பேரும் காலம் கடந்து உணர்ந்திருக்கின்றார்கள்.
இந்த உண்மையை இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஒரு தமிழ் நாளிதழின் செய்தியைப் படித்தாவது ம.இ.காவினரும் அந்த புவா பால மக்களும் யார் அன்று அவர்களுக்கு உண்மைலே உதவ முன் வந்தது என்று புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
கம்போங் சிக்கடி புந்தோங்
இதே போன்றுதான் இப்பொழுது கம்போங் சிக்கடி புந்தோங் மக்களுக்கு அன்று ம.இ.காவினரும் பாரிசான் நேசனல் அரசும் நிலத்தைக் காலி செய்தால் மாற்று மனைகள் வழங்கப்படுமென்று உறுதி கூறியிருந்தார்கள்.
ம.இ.கா குமரன் காலத்தில் ஆரம்பித்த இந்த உறுதி வீரா, ராஜூ மற்றும் கணேசன் காலம் கடந்தும் இன்று வரை நாங்கள் பார்த்துக்கொள்வவோம், எங்களுக்குத் தெரியும், தீர்த்துவிடுவோம், நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லியே காலத்தைக் விரயமாக்கி இன்று வரை அப்பிரச்சனை தீர்க்கப் படமாலேயே இருக்கிறது.
இது போன்ற வெத்து வாக்குகளை பாக்காத்தான் அரசு என்றுமே வழங்கியதில்லை. இதைத்தான் கம்போங் புவா பால பிரச்சனையிலும் கையாண்டு உடனுக்குடன் தீர்வுகாண முற்பட்டோம் . அதனைத் தடுக்கத்தான் ம.இ.காவின் இளைஞர் அணியினர் முற்பட்டு புவா பாலா மக்களை ஏமாற்றியுள்ளனர்.
கம்போங் தைலி மக்களுக்கு அதே கதி வேண்டாம்
இதே நிலைதான் இன்றும் கம்போங் தைலியில் வாழும் 53 குடும்பங்களுக்கும் ஏற்படவுள்ளது. குறைந்த வருமானத்தில் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த மக்களை வெளியேரும்படி பாரிசான் அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னுமொரு புவா பாலா சம்பவம் நடைபெறாமலிருக்க வேண்டுமென்றால் ம.இ.காவும் பாரிசான் அரசும் உடனடியாக அவர்களுக்கு ஒரு தீர்வினை காண வேண்டும்.
2010ல் பேரா மந்திரி புசார் ஜம்ரி, இந்த 53 குடும்பங்களுக்கும் ஒரு தீர்வு காணும்படி ஈப்போ நகாராண்மைக் கழகத்திற்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவு இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. முன்னாள் மந்திரி புசார், தஜ்லி ரோஸ்லி, 2005க்குள் புறம்போக்கு குடிசை வாசிகள் பேராக் மாநிலத்தில் இருக்காது என்று உறுதி கூறியிருந்தார். அது என்ன வாயிற்று என்று தெரியவில்லை!
ம.இ.காவின் நிலைப்பாடு என்ன?
இந்தப் பிரச்சனைக்கெல்லாம் பேராக் மாநில ம.இ.காவினரின் நிலைப்பாடு என்னவென்று மக்களுக்கு தெரிவிக்க முடியுமா?
ஐய……. குண்டர் கும்பல் 18…. மேலே நீங்கள் சொன்ன ஒன்று,,,,,,,, இன்னும் நிறையே சொல்லிக்கொண்டு போகலாம்,,,,,,,,,,,,போகலாம்……..முற்று புள்ளி என்று ஒன்று வரும்!!!!!!!!!!!!!!!!!!!!
எவ்வளவு நாட்களுக்கு செத்த பாம்பையே [ம.இ.கா] அடித்துக்கொண்டிருக்க போகிறீர்? அம்னோ பெருச்சாளிகளை குடைவதுதானே! உம்முடைய ‘side பிசினசுகளுக்கு’ ஆப்பு வைத்துவிடுவார்கள் என்று பயப்படவேண்டாம்.
திறமை இல்லாத, சுயநலபோக்கு, தூங்கி விழியும் முட்டாள் சமுதாய தலைவர்கள். காரணம் நாம் வசிக்கும் இடத்திலேயே அவர்கள் லச்சணத்தை பார்க்கலாம்.
இவர்களின் தன்மூப்பான செய்கையால் தமிழ் கிறித்துவ ,தமிழ் முசுலிம் மாணர்கள் தமிழ் பள்ளியில் காணாமல் போய்விட்டனர்.
அதுதான் தெரிந்த விசயம்தானே!
ஒரு தமிழன் அளிவதட்க்கு ஒரு தமிழன் தானே காரணம். இவர்கள் நம்மை வாழவும் விடமாட்டார்கள் சாகவும் விடமாட்டார்கள். தானும் செய்யமாட்டார்கள் மற்றவரையும் செய்ய விடமாட்டார்கள். தமிழருக்கு நல்லது செய்வோம் என்று சொல்லி சொல்லி கெடுதல் தான் செய்கிறார்கள். உதாரணம் தமிழ் பாட சம்பந்தமாக எவனும் வாயை திறக்கவே இல்லை. ஆனால் இப்போ எதிர் கட்சியில் இருந்து யாராவது வாயை திறக்கட்டும் பாருங்கள். உடணே போட்டிக்கு MIC , நல்லா, தனேந்திரன், கேவியஸ் என்று போட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு இல்லாமல் இவர்கள் மோதிக்கொள்வது BN னுக்கு ஒரு சாதகமாக இருக்கும். கல்வியும், கோயில் சம்பந்தமான விசியத்தில் அரசியல் விளையாட்டு இல்லாமல் தமிழால் ஒன்று படுவோம்? தமிழையும் தமிழ் இனத்தையும் காப்பாற்றுவோம். தமிழனுக்கு தேவையானவைகளை ஒன்றிணைத்து செயல்படுவோம்.
ஐயா! குலா அவர்களே! மோகன் இது போன்ற தீங்குகளைத் தமிழனுக்குச் செய்ததால் தான் இன்று அவர் பெரிய பணக்காரராக இருக்கிறார். அரசாங்க குத்தகைகள் கிடைத்திருக்கின்றன. தமிழனுக்குத் தீங்கு செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று கணக்குப் பார்த்துத் தான் ம.இ.கா. செயல் படுகிறது. அவர்கள் அம்னோவின் கைகூலிகள் என்று சொல்லக் கூடாது. கைலிகள்!
பாரிசானில் தமிழர்களை பிரதி நிதிக்க மாற்று அரசியல் கட்சி ஒன்று தேவை