இதய நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதாவது, அனைத்து விதமான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் சில நேரங்களில் நிறைய மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், மறதியில் சில மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடுவதுண்டு.
இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பெரிய விளைவை ஏற்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புதிய மருந்து ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் சார்பில் திட்டமிடப்பட்ட இந்த ஆய்வு, டாக்டர் ரெட்டி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 62 வயதில் உள்ள சிவிடி எனச் சொல்லப்படுகிற இதய நோயாளிகள் 2004 பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இதய நோய் மருந்தின் விளைவுகள், பாதிப்புகள் மற்றும் பயன்கள் ஆகியவைக் கண்டறியப்பட்டன.
இதில் ஆஸ்பிரின் மற்றும் ஸ்டாடின் உட்பட இரண்டு வகையான இரத்த கொதிப்பையும் குறைக்கும் மருந்துகள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மருந்துகளின் செயலைச் செய்யும் வல்லமைப் பெற்ற இந்த மருந்துக்கு பாலிபில் என பெயரிட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பான செய்தி என்றதுமே இனிப்பு நீர் எகிரிவிடுகிறது! மருந்து வரட்டும் பார்க்கலாம்!