தாயை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 வயது குட்டிப் பாப்பா

mother_baby_001இங்கிலாந்தில் தாய் ஒருவர் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.

இங்கிலாந்தை சேர்ந்த 2 வயது குட்டிப் பாப்பாவின் பெயர் லூயிஸ் ஹிஸ்டன்.

இவள் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள்.

இக்குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அரை மைல் தூரம் உள்ளது.

mother_baby_003லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு வந்துள்ளார்.

ஆனால் சில மணி நேரங்களிலேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

அப்படியோ ஷாக் ஆன சமந்தா, என்னவென்று விசாரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரியவந்துள்ளது.

பள்ளியில் சமந்தா விட்டு வந்ததும், மெதுவாக வெளியே வந்து அப்படியே பொடிநடையாக வீட்டுக்கு வந்துவிட்டார்.

வழியில் ஒரு கால்வாய், பாலம், போக்குவரத்து நிறைந்த சாலைகள், சுரங்கப்பாதை, குறுகிய வனப்பகுதி என அனைத்தையும் நிதானமாக வேடிக்கை பார்த்தபடி போயுள்ளாள் சிறுமி.

பத்திரமாக வீடு வரை வந்து விட்ட அவளைப் பார்த்து அவளது அம்மாதான் பயந்து போய் விட்டார்.

இதுகுறித்து சமந்தா கூறுகையில், எனது மகள் காணாமல் போனது, பள்ளியை விட்டு வெளியேறியது எதுவுமே பள்ளிக்கூடத்தி்ல் யாருக்கும் தெரியவில்லை.

அவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும என்று கோபமாக கூறியுள்ளார்.

லூயிஸின் தந்தை ஜான் ஹில்டன் கூறுகையில், எனது மகள் தவறானவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்னாகியிருக்கும்.. நினைக்கவே பயமாக இருக்கிறது.

வழியில் இருந்த கால்வாயில் இறங்கியிருந்தால், நினைக்கவே படபடப்பாக இருக்கிறது.

இதற்கெல்லாம் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.