புத்ரா ஜெயாவில் பிரதமர்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களின் கூட்டமோ கூட்டம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விரைவில் புதிய அமைச்சரவையை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம்.
முதலில் மூன்று மணிக்கு பிரதமர் புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. பிறகு பிற்பகல் 1 மணிக்கு என்றார்கள்.
மலேசியாகினியும் செய்தியாளர்கள் கூட்டத்துக்குச் செல்ல விரும்பியது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.























