வலைப்பதிவுகளையும் இணையச் செய்தித் தளங்களையும் நம்பி விட வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமெரிக்காவில் பயிலும் மலேசிய மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
“வலைப்பதிவுகள் அல்லது இணைய செய்தித் தளங்களில் இடம்பெறும் எல்லாவற்றையும் நம்பக் கூடாது. அவற்றில் இடம்பெறும் பெரும்பாலான செய்திகள் வீண் வதந்திகள் அல்லது நிரூபிக்கப்படாத வெற்றுக் குற்றச்சாட்டுகள்”, என்றாரவர். பிரதமர் நஜிப் நேற்று நியூ யோர்கில் மலேசிய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசினார்.
























அம்னோ வலைப்பதிவாளர்களின் இணையத்தளங்கள் மட்டுமே நம்பக்கூடியவை. அதனை மட்டும் நீங்கள் நம்பலாம்!
ஊழல் நம்பிக்கை நாயகனை நம்புங்கள். “நம்புங்கள் நஜிப் நல்லவர்”
இணைய செய்திகளை அரசாங்கம் ஆரம்பத்தில் “வீண் வதந்திகள்” என கூறிய யாவும் இறுதியில் “உண்மையான செய்திகள்” என பலமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதை அயல் நாட்டில் பயிலும் மாணவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரோ ? நமது “ஊநநா” ஊழல் நன்கொடை நாயகன்.
ஆமாம் உங்களை நம்பினால் நாடு சிங்கபூரைவிட பல மடங்கு முன்னேறிவிடும்.உங்களது நம்பிக்கை பொய் என்பது பல வழிகளில் நிருபனமானது. இனிமேலும் நம்ப தயாராகவில்லை.போதும் உங்கள் நம்பிக்கை உறுதி மொழி.அது உங்கள் கட்சி குள்ள நரி கூட்டதிர்கு அடங்கும்.மக்களை நம்பிக்கை என்ற பெயரில் இனியும் ஏமாற்றவேண்டாம்.