பிரதமர்: இலவச கல்வி என்றால் வரி உயரும். மலேசியர்கள் அதற்குத் தயாரா?

freeமலேசியர்கள்  கூடுதல்  வரி  செலுத்த  முன்வந்தால்  அரசாங்கத்தால்  இலவச  கல்வி  வழங்க  முடியும் தேசிய  உயர்க் கல்விக்  கடன்  நிதியையும் (பிடிபிடிஎன்) இரத்துச்  செய்ய  முடியும்  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்.

“பிடிபிடிஎன்னைக்  குறைக்க  முடியும்,  இலவச  கல்வி  வழங்க  முடியும். அதற்கு  நீங்கள்  கூடுதல்  வருமான  வரி  செலுத்த  வேண்டி  இருக்கும். ஸ்கேண்டினேவிய  நாடுகளில்  உயர்   வருமான  வரி  விகிதம்  65 விழுக்காடு.

“நீங்களும்  பலவற்றைப்  பெறலாம்  ஆனால், அதற்கு  65விழுக்காடு  வருமான  வரி  செலுத்த  நீங்கள்   தயரா?”. நஜிப்,  நேற்று  நியூ  யோர்கில்  மலேசிய  மாணவர்களைச்  சந்திக்கும்  ஒரு  நிகழ்வில்  கலந்துகொண்டபோது  இவ்வாறு  வினவினார்.

ஸ்வீடன், நோர்வே  ஆகிய  நாடுகளில் பட்டப் படிப்பு  வரை  கல்வி  இலவசம். இன்னும், சமுதாயத்துக்கு  நன்மை தரும்  ஏராளமான  திட்டங்களும்  உண்டு.

ஆனால், அந்நாடுகளில்  மலேசியாவுடன்  ஒப்பிடும்போது  வருமான  வரி  விகிதம் அதிகமாகும்.

மலேசியாவில்  வருமான  வரி 10-இலிருந்து  25 விழுக்காடுவரை  உள்ளது.  நோர்வேயில்  வருமான  வரி 39 விழுக்காடு, ஸ்வீடனில்  56.9விழுக்காடு.