மலேசியர்கள் கூடுதல் வரி செலுத்த முன்வந்தால் அரசாங்கத்தால் இலவச கல்வி வழங்க முடியும் தேசிய உயர்க் கல்விக் கடன் நிதியையும் (பிடிபிடிஎன்) இரத்துச் செய்ய முடியும் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“பிடிபிடிஎன்னைக் குறைக்க முடியும், இலவச கல்வி வழங்க முடியும். அதற்கு நீங்கள் கூடுதல் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். ஸ்கேண்டினேவிய நாடுகளில் உயர் வருமான வரி விகிதம் 65 விழுக்காடு.
“நீங்களும் பலவற்றைப் பெறலாம் ஆனால், அதற்கு 65விழுக்காடு வருமான வரி செலுத்த நீங்கள் தயரா?”. நஜிப், நேற்று நியூ யோர்கில் மலேசிய மாணவர்களைச் சந்திக்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது இவ்வாறு வினவினார்.
ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளில் பட்டப் படிப்பு வரை கல்வி இலவசம். இன்னும், சமுதாயத்துக்கு நன்மை தரும் ஏராளமான திட்டங்களும் உண்டு.
ஆனால், அந்நாடுகளில் மலேசியாவுடன் ஒப்பிடும்போது வருமான வரி விகிதம் அதிகமாகும்.
மலேசியாவில் வருமான வரி 10-இலிருந்து 25 விழுக்காடுவரை உள்ளது. நோர்வேயில் வருமான வரி 39 விழுக்காடு, ஸ்வீடனில் 56.9விழுக்காடு.
























நீங்கள் “நன்கொடை” இல்லாமல் அரசியல் நடத்தத் தயார் என்றால் நாங்களும் வரி கட்டிப் படிக்கத் தயார். இப்பொழுதுதான் எழுதுகோல் , அழிப்பான், அடிகோல், புத்தகம் என்று அனைத்திற்குமே GST கட்டிதானே எங்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றோம். அப்புறம் எங்கே இருக்குது இலவச கல்வி? ஒருகால் இவர் இனத்திர்க்குச் சொன்னாரோ?
ஆயிரம் பொய்யைச்சொல்லி இன்னமும் எவ்வளவு கொல்லையிடப்போகிறாய்?
உனக்கு வரிக்கட்டி,கட்டி, மக்கள் சோற்றுக்கு திண்டாடி வருகின்றனர்,மேலும் மேலும் வரியை உயர்த்தி எங்களை நடுத்தெருவில் நிறுத்த போகிறாயா?
மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ப்பதற்கு முன் ,அவர்களின் ஒருமணி நேர ஊதியம் எத்தனை டொலர் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்,அவர்களின் ஒருமாத செலவை குறிப்பிட்டிருக்கவேண்டும். நஜிப்புக்கு மலேசியாவை பிடிக்கவில்லை என்றால் நியூ யோர்க் போய்விடலாம்.
( இவனைச்சொல்லி குற்றமில்லை இவனுக்கு வாக்கழித்தவர்களை “அதால்” அடிக்கவேண்டும் )
முதலிலல் சம்பளத்தையும் ஏலேவன்சேயும் குறைக்கணும்
நீ உன் மனைவியும் நாட்டின் வளத்தை கொள்ளை அடிக்காமல் இருந்தால் இலவச கல்வி சாத்தியமே .
வெளி நாடுகளில் வரி உயர்வானாலும் ,வேலை வாய்ப்பு ,அடிப்படை வசதி,நியாய விலையில் பொருள் என அனைத்தும் உண்டு .உங்களைப்போல் கேடுகெட்ட ஆட்சி அங்கே இல்லை .
முடியுமா? என்று கேள்வி கேட்காதீர்கள்! ஏன் முடியாது என்று கேள்வி கேளுங்கள், வழி பிறக்கும்!
என்ன நா………..ப் அவர்களே. கொள்ளையடிப்பபு தொடர்வதற்கு புதிய வழியை கண்டுபிடித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. மலாய்காரர்களுக்கு எல்லாம் இனாமகத்தானே கொடுக்கப்படுகிறது. எவ்விதமான வரியை அமுல் படுத்தினாலும் துன்பப் பட போகிறவர்கள் மலாய்க்காரர் அல்லாதவர்கள்தான். காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று நான்கு பேர் அரசாங்கத்தில் பணிப் புரிபவர்கள் உங்கள் மக்கள் தானே..
எப்படி பட்ட மடையன் ,எப்படி பட்ட சொல்லி இருக்கிறான் பாருங்களேன் ,நான் இந்த உலகில் பார்த்த அதி நவீன மடையன் இவன்தான் ,,