நுருல்ஹிடயா அஹ்மட் ஜாஹிட், துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் மூத்த புதல்வி. 1998-இல் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர் நுருல்ஹிதயா.
அப்போது, அஹ்மட் ஜாஹிட் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர். அவர் அன்வாரின் வலது கையாக இருந்து செயல்பட்டதால் அவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அம்னோவுக்கு விசுவாசமாக இருப்பதாய் வாக்களித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
நுருல்ஹிதயா வளரவளர தெரு ஆர்ப்பாட்டம் பற்றி அவ்ருடைய கருத்தும் மாறத் தொடங்கியது. இப்போது அவர் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைத் தன் வாழ்க்கையில் தான் செய்த “மிகப் பெரிய தவறு” என நினைக்கிறார்.
தெரு ஆர்ப்பாட்டங்களே தப்பு என்று கூறும் அவர், மக்களுக்கு அரசாங்கத்தின்மீது அதிருப்தி என்றால் அதை வெளிப்படுத்தவும் பரப்பவும் வேறு பல தளங்களும் வழிமுறைகளும் உள்ளன என்றார்.
அந்த வகையில் பெர்சே பேரணிகளை அவர் எதிர்க்கிறார். அதேபோல், அண்மையில் சிகப்புச் சட்டைப் பேரணி நடத்தப்பட்டதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. “அது நல்லதல்ல” என்பது அவரின் கருத்து.
நுருல்ஹிதயா பிஎன் இளம் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த “Hello YB2…Women in House” என்னும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.
























அது முன்பு
இது இப்போ
ஒரு தெருப் போராளி தென்னங்கீற்றாக மாறிவிட்டார்! அடுத்த தேர்தல் களத்தில் உங்களுக்கும் ‘சீட்’ உண்டு! வாழ்த்துகள்!
சுயநலம் உங்களது சுய ரூபம்.