லியோங் சிக் பாசிர் கூடாங் மசீச இளைஞர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்

MCALiongsikபிரதமர் நஜிப்புடனான உறவை முறித்துக் கொண்டுள்ள பாசிர் கூடாங் மசீச இளைஞர்களின் உணர்வைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மசீசவின் முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் இன்று கூறினார்.

தாம் இளைஞராக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் என்றாரவர்.

பல்வேறான பிரச்சனைகளுக்கு நஜிப் முறையான விளக்கங்கள் அளிக்கவில்லை என்று கூறிய லியோங், செப்டெம்பர் 16 இல் நடைபெற்ற சிவப்புச் சட்டையினரின் பேரணியைப் பாராட்டுகிற அளவுக்கு அவர் சென்று விட்டதோடு அது ஓர் அமைதியான ஒன்றுகூடுதல் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இதனால் பலர் பிரதமர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்றாரவர்.

ஆகவே, தம்மால் இளையோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று லியோங் கூறியதாக சின் சியு டெய்லி தெரிவிக்கிறது.

நஜிப்பிடம் விளக்கம் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறிய லியோங், “நான் இளைஞராக இருந்தால் அதைத்தான் (பாசிர் கூடாங் இளைஞர்கள் கூறியதை) சொல்வேன்”, என்று இன்று கோலாலம்பூரில் ஒரு செதியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், ஏன் ரிம2.6 பில்லியன் பிரதமரின் சொந்தக் கணக்கில் வைக்கப்பட்டது போன்ற பிரச்சனைகளுக்கு இதுவரையில் பதிலே கிடையாது என்பதை லியோங் சுட்டிக் காட்டினார்.

சிவப்புச் சட்டையினரின் பேரணியைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்துமாறு நஜிப்பை முன்னாள் மசீச தலைவைரான லியோங் சிக் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.