வங்காள தேசத்தில் கோவில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டார். ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
வங்காள தேசத்தின் பஞ்சாகர் அருகே உள்ள தேவிகஞ்ச் கோவில் இது தலைநகர் டாக்காவில் இருந்து 308 மைல் தொலைவில் உள்ளது.
இந்த கோவில் பூசாரி ஜோகேஸ்வர் ராய் (வயது 55) இன்று காலை பூஜை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தார். அப்போது 5 முதல் 6 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து பூசாரியின் கழுத்தை அறுத்தனர்.
https://youtu.be/iENgCnTWxqQ
இதில் பூசாரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் சமூக வலைதளம் மூலம் பொறுப்பேற்று உள்ளனர். மேலும் அங்கிருந்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். மேலும் பூசாரியை கொலை செய்வதை தடுத்த பக்தர் ஒருவர் காலில் சுடபட்டார்.
சமீப காலங்களில் வங்காளதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் மசூதி மற்றும் கோவில்கள் மீது வெடிகுண்டு வீசியும் தாக்குதல்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் போலீசார் ஜமத்தூல் முஜாகிதீன் வங்காளதேசம் பிரிவை சேர்ந்த 4 பேரை கைது செய்து உள்ளனர்.
-http://www.tamilwin.com

























உலகத்தில் இ…. என்றொரு மதம் இல்லாமல் இருதிருந்தால் அணைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டில் எந்த கொடூரமும் இல்லாமல் வால்திருபர்கள் . ஒரு மதமே எமனுக்கு போட்டியாக இருக்கிறது என்றால் அது இந்த மதம் மட்டுமே.