டான்சானியா: படகு விபத்தில் 100 பேர் பலி

டான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பல நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த விபத்து குறித்து தெரிவித்த ஓர் உள்ளூர் அதிகாரி, ஏரியில் மூழ்கியவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டக்கூடும் என்று கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை விடிகாலை வரை மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் ஏறக்குறைய 100 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். -BBC_Tamil

TAGS: