மத்திய கிழக்கு நெருக்கடி நிலையிலும் விமானக் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க ஏர்ஏசியா முடிவு.

கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது, ஆனால் மற்ற விமான நிறுவனங்களை விட எங்களது உயர்வு குறைவாகவே இருக்கும் என்று கேபிடல் ஏ (Capital A) தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

உயர்ந்து வரும் செலவினங்களை விமான நிறுவனங்கள் மட்டுமே சுமக்கக் கூடாது, மாறாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையின் கூட்டு முயற்சிகளின் மூலம் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்று கேபிடல் ஏ (Capital A) தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக ஏர்ஏசியா விமானக் கட்டணங்கள் சிறிதளவு உயரக்கூடும், இருப்பினும் அவை கட்டுப்படியாகக்கூடிய விலையிலேயே இருக்கும் என்று கேபிடல் ஏ தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

தேவை வலுவாக இருப்பதால் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா விமானப் பயணங்களை ரத்து செய்யாது என்றும், எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாமல் கட்டண மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றாலும், மற்ற போட்டி நிறுவனங்களை விடக் குறைவான அளவிலேயே கட்டணங்களை உயர்த்த ஏர்ஏசியா இலக்கு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“கட்டணங்கள் உயரத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் எங்களது கட்டண உயர்வு மற்றவர்களை விட மிகக் குறைவாகவே இருக்கும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

செலவு அழுத்தங்கள் இருந்தபோதிலும், வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்களின் விமானக் கொள்ளளவு குறைந்துள்ளதால், ஏர்ஏசியாவால் தொடர்ந்து இயங்கவும், சுமையின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளவும் முடிகிறது என்று பெர்னாண்டஸ் கூறினார்.

“எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேய்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேய்ஸ் போன்ற வளைகுடா பிராந்திய விமான சேவைகளின் பயணிகள் இருக்கை திறன் சுமார் 15–20% வரை குறைந்துள்ளதால், இந்த கூடுதல் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார். மேலும், இந்த திறன் குறைப்பு, ஆசியான் நாடுகள் பிராந்தியத்தில் மாற்று விமான மையங்களாக தங்களை நிறுவிக்கொள்ள ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் அவர் சேர்த்தார்.

இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகளை விமான நிறுவனங்கள் மட்டுமே சுமக்கக் கூடாது என்றும், இத்துறை சார்ந்த கூட்டு முயற்சிகள் மூலம் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.

“கட்டணங்களை எங்களால் முடிந்தவரை குறைவாக வைத்திருக்க நாங்கள் எங்களது சிறந்த முயற்சியை மேற்கொள்கிறோம், ஆனால் விமானப் போக்குவரத்து சூழல் அமைப்பின் மற்ற பகுதிகளிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு தேவை”.

எரிபொருள் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். விமான நிலையங்கள் தங்களது பங்கை ஆற்ற வேண்டும். இதர விநியோகச் சங்கிலிகளும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும்.

ஒரு மையத்தை உருவாக்கி இந்த கூடுதல் விஷயங்களைச் செய்ய இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இதில் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அனைத்து விமான நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படும், அது மிகச் சிறப்பானது,” என்றார்.