பெருநாள் கொண்டாட்டத்திற்காக சேவை மையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவதை ஜொகூர் குடிவரவுத் துறை மறுத்துள்ளது

செத்தியா துரோபிகா அலுவலகத்தில் பெருநாள் கொண்டாட்டத்திற்காகச் சேவை மையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை ஜொகூர் மாநில குடிவரவுத் துறை மறுத்துள்ளது.

குடிவரவுத் துறை கவுண்ட்டர்கள் வழக்கம்போல் இயங்கியதாகவும், அந்த “கொண்டாட்டம்” என்பது ஒரு சிறிய உள்வட்ட ஹரி ராயா விருந்து மட்டுமே என்றும் அதன் இயக்குனர் ருஷ்டி டாரஸ் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

“பின்னணியில் சில பெருநாள் கொண்டாட்ட பாடல்கள் ஒலித்திருக்கலாம், ஆனால் அது வெளி நபர்கள் யாரும் அழைக்கப்படாத ஒரு சிறிய அளவிலான நிகழ்வு மட்டுமே,” என்று அவர் கூறினார்.

சேவை மையங்கள் மூடப்படும் பட்சத்தில், அது குறித்து பொதுமக்களுக்கு எப்போதும் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

-fmt