கிளாந்தான் பள்ளி விடுதியில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட படிவம் 1 மாணவர் உயிரிழப்பு.

மரணத்திற்கான காரணம் மூளையில் தன்னிச்சையாக ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்தது எனத் தீர்மானிக்கப்பட்டது.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.”

நேற்று கிளந்தான், குவா முசாங், பாலோவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி விடுதியில் மயக்க நிலையில் காணப்பட்ட படிவம் 1 மாணவர், தலையில் ஏற்பட்ட தன்னிச்சையான இரத்தப்போக்கு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததன் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நேற்று காலை 8.53 மணிக்கு சிறுவனின் தந்தையிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்ததாக அவர் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம் சிறுவனை சிக்கு 3(Chiku 3) சுகாதார கிளினிக்கிற்கு கொண்டு சென்றதாகவும், அங்கு மருத்துவப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

“பிரேத பரிசோதனை குவா முசாங் மருத்துவமனையில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது,” என்று அவர் கூறினார்.

மேலதிக சோதனையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை, மேலும் சிறுவனின் உடல் அடக்கம் செய்வதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிக் கூறினார். மேலும், இது குறித்து பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.