பூனைக்குட்டி தன் வாகனத்தின் பொன்னெட்டுக்கு (bonnet) அடியில் ஊர்ந்து சென்றதால் அதை அடித்ததாக சந்தேக நபர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பத்து காஜா காவல்துறைத் தலைவர் நூர் அஹாவான் முகமது கூறுகையில், சந்தேகநபர் தானாக முன்வந்து மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், பத்து குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பத்து காஜாவில் உள்ள பண்டர் தாசிக் இடமான்(Bandar Tasik Idaman, Batu Gajah) பகுதியில் ஒரு நபர் அலுமினியத் துடைப்பக் கம்பியால் பூனைக்குட்டியை பலமுறை தாக்கியதாகக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பத்து காஜா காவல்துறைத் தலைவர் நூர் ஏஹவான் முகமது(Noor Aehawan Mohammad) கூறுகையில், சந்தேக நபர் தானாகவே மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்ததாக ஹரியான் மெட்ரொ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபர், தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பகுதி (bonnet) கீழே பூனைக்குட்டி சென்றிருந்ததால், அதைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.
“காரின் இயந்திரத்தை இயக்கும்போதோ அல்லது காரை நகர்த்தும்போதோ பூனைக்குட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் அல்லது அது வாகனத்தை சேதப்படுத்தலாம் என்ற அச்சத்திலேயே சந்தேக நபர் அதனைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்,” என நூர் ஏஹவான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் பூனைக்குட்டி உயிருடன் இருந்ததாகவும், ஒரு அண்டை வீட்டுக்காரர் அதைக் காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில் கால்நடை மருத்துவரின் அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் Penal Code பிரிவு 428 மற்றும் விலங்குகளைத் துன்புறுத்துதல் தொடர்பான Animal Welfare Act 2015 பிரிவு 29(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
சுமார் இரண்டு நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில், அந்த நபர் துடைப்பக் கம்பியால் பூனைக்குட்டியை பலமுறை கடுமையாகத் தாக்குவது காணப்படுகிறது.
மேலும், அந்தக் காணொளியில் அவர் அணிந்திருந்த சீருடையை அடிப்படையாகக் கொண்டு, அவரது பணியிடத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகப் பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
























