பேராக் மாநிலத்தில் விக்டோரியா பாலத்திலிருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

சிறுவனும் அவனது தந்தையும் பாலத்தின் மீது கைகோர்த்தபடி நடந்து கொண்டிருந்தபோது, சுமார் ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து சிறுவன் ஒரு துளை வழியாக கீழே விழுந்தான்.

சுங்கை சிப்புட் காவல் நிலையத் தலைவர் சரண் ஐ வான் கூறுகையில், விடுமுறைக்காகச் சென்றிருந்த சிறுவனும் அவனது குடும்பத்தினரும் சுற்றுலாத் தலமான விக்டோரியா பாலத்திற்குச் சென்றிருந்தனர்.

நேற்று மாலை பேராக் மாநிலம், எங்கோர் பகுதியில் உள்ள விக்டோரியா பாலத்திலிருந்து தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான்.

சுங்கை சிப்புட் காவல்துறைத் தலைவர் சரண் ஐ வான் கூறுகையில், ஜொகூரின் குளுவாங்கைச் சேர்ந்த அந்தச் சிறுவனும் அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக அந்தச் சுற்றுலாத் தலத்திற்குச் சென்றிருந்ததாகத் தெரிவித்தார்.

42 வயதான தனது தந்தையுடன் கைகோர்த்து பாலத்தில் நடந்து கொண்டிருந்தபோது, பாலத்தில் இருந்த ஒரு துளை வழியாக சிறுவன் சுமார் ஐந்து மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக அவர் கூறினார்.

“பாலத்துக்குக் கீழே இருந்த சாலை மீது விழுந்த சிறுவன், அந்த நேரத்தில் உயிருடன் இருந்தான். உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், இரவு 7.40 மணியளவில் அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் பெரித்தா ஹரியான் நாளிதழிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாளிதழின் தகவலின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.