சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது…

காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் – ஐநா வரவேற்பு

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் காணாமல் போய் இருக்கும் 20 ஆயிரம் பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவி செய்வதற்காக, இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை நியமித்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு…

அவுஸ்திரேலியாவில் தடுப்பில் உள்ள ஈழ அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர்…

பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற…

மத்திய அரசாங்கத்திடமிருந்து பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது போய்விடலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனுக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர்…

லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர்! சர்வதேச ஊடகங்கள்…

லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இலங்கை வீரரான அனில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். முதல் 50 மீற்றர் தூரம் வரை அனில் பிரசன்ன…

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி! தயார் நிலையில் இலங்கை இராணுவம்!…

மீண்டும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளின் மீள் எழுச்சி தொடர்பில் இலங்கை இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க பயங்கரவாத அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்…

தமிழர் தீர்வில் மந்தநிலை: வெற்றி என கூற முடியாது என்பதை…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்று கொள்வதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின்…

காணாமல் போனவர்கள் இரகசிய விசாரணை முகாம்களில்?

இரகசிய விசாரணை முகாம்கள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு படையினர் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்ட படைத்தரப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே,…

நகங்களைப் பிடுங்குதல்.. பிறப்புறுப்புகளை சிதைத்தல்..! இலங்கையில் கொடூர சித்திரவதைகள் இடம்பெறுவதாக…

இலங்கையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சித்திரவதை தொடர்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள…

பென் எம்மர்சனுக்கு புலிச் சந்தேகநபர்களை பார்வையிட யார் அனுமதி வழங்கியது…

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை, ஐ.நா அதிகாரி பார்வையிட யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின்…

இலங்கையில் மறைந்திருக்கும் மன்னன் இராவணனின் மர்மங்கள்! பிரித்தானியாவில் சிக்கிய ஆதாரங்கள்

இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணன் தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியாவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராவணன் தொடர்பில் இலங்கையில் இல்லாத பல சாட்சிகள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இராவணன் வரலாறு தொடர்பில் இலங்கையிலுள்ள சில கடும்போக்குவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், பிரித்தானியாவில் இதனை உறுதி…

மகன் பெயர் ஈழ பிரபாகரன்.. மகள் பெயர் தமிழினி! தம்பி…

தனது மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என பெயர் வைத்திருப்பதாகவும் தம்பி பிரபாகரன் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் ஏர்காடு மலைப் பகுதியில் "தம்பி பிரபாகரன்" என்ற பெயரில் பெருமாள் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.…

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது! இரா.சம்பந்தன்

பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன், போர்க்குற்ற…

வரலாற்றுப் பழியை சுமக்குமா கூட்டமைப்பு?

பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றையாட்சி புராணத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். அஸ்கிரியவில் நடந்த மேற்படி கூட்டத்தை அடுத்து, கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள்,…

வடக்கின் நிலைக்கு இது தான் காரணம்! முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு

எல்லாவற்றிலும் குறை கூறுவதில் நாங்கள் தான் வல்லவர்கள். இதனால் தான் வடக்கில் இன்று திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றதென வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. இக்கருத்தரங்கிற்கு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்…

மாற்றுத் தலைமை காலத்தின் தேவை; விக்னேஸ்வரன் மறுத்தல் இன்னொரு தலைமை…

தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் மாற்றுத் தலைமை காலத்தின் தேவை என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “தற்போதையை சூழலில் சரியான பாதையில் செல்வதற்கான தலைமையை ஏற்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தயங்குவாரானால், இன்னொரு தலைமையை அல்லது கூட்டுத் தலைமையை…

பணத்திற்காக கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்! விசாரணைகளில் அம்பலமான உண்மை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் பணத்திற்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து…

71 விடுதலைப் புலிகளை மட்டும் விடுவிக்க முடியாது! அவர்கள் பயங்கரவாதிகள்

2008ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய…

சமஷ்டி என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு: சம்பந்தன்

காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படுமாக இருந்தால் அது…

முள்ளியவளை காணி அபகரிப்பிற்கு எதிரான பேரணி

முல்லைத்தீவு - முள்ளியவளையில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணியினால்” பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு - முள்ளியவளை, ஆலடிச்சந்தியில் இருந்து கூழாமுறிப்பு வரை நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பேரணியானது…

விடுதலைப்புலிகள் உருவாக்கிய வனத்தை அழித்து அமைக்கப்படும் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்கே காணிகள் இல்லாத நிலையில் முஸ்லிம் மக்களுக்காக விசேடமாக ஒரு செயலணியை உருவாக்கி காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் உள்ள காடுகளை அழித்து அந்த பகுதியில்…

இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றம்: இளைஞர் அணி குற்றச்சாட்டு

எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர்…

தமிழ் மக்களுக்குரிய சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிப்போம்: சம்பந்தன்!

எம்மை நம்பிய எமது மக்களுக்குக்குரிய நிம்மதியான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் கடுமையாக முயற்சித்து வருகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள், ஆதரவாளர்களான மக்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த சந்திப்பு கடந்த…