முல்லைத்தீவு – முள்ளியவளையில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணியினால்” பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி இன்று முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு – முள்ளியவளை, ஆலடிச்சந்தியில் இருந்து கூழாமுறிப்பு வரை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பேரணியானது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து சமூகவளைத்தளங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே பேரணியில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேரந்த சட்டத்தரணியொருவரால் குறித்த பேரணியின் போது வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பேரணியில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்திற்கு பின்னர் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
-tamilwin.com