வெளிப்படைத்தன்மை அற்ற பயங்கரவாத தடுப்புச் சட்ட மாற்றீடு

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் ஜிஎஸ்பிளஸ் வர்த்தக சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவிற்கு முன்னதாகவே…

சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டம்

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தால் ஜீஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். வடமராட்சியில் நேற்று(7) ஊடகங்களுக்கு புதிய…

இலங்கை ஏழை மக்களுக்காக இங்கிலாந்து மாணவர்களால் திரட்டப்பட்ட நிதி

இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தின் ஏழை மக்களுக்கான சுத்தமான கிணறுகளை பராமரித்தல் மற்றும் விவசாயத்துறைக்கு உதவும் வகையில் இங்கிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள சொலிஹூல் நகர பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் 58ஆயிரம் பவுண் நிதியை திரட்டியுள்ளனர். இந்தநிதியை, இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக…

உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியின்…

தென் கொரியாவின் ஹூண்டாய் இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை…

தென் கொரியாவில் இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தென் கொரிய நிறுவனமான 'ஹூண்டாய்'வின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த பிரதிநிதிகள் கெளரவ அவர்களைச் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அஜித் ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (04) தென் கொரிய வேலைகளுக்கு இலங்கை…

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன

மத்திய ஜப்பான் தடுப்புக் காவலில் இலங்கைப் பெண் ஒருவர் இறப்பதற்கு முன், அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளால் வியாழக்கிழமை முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்ட பாதுகாப்பு கேமரா காட்சிகள். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் வைக்கப்பட்டிருந்த போது 33 வயதில்…

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஈஸ்டர் வாரத்தில் நாடு முழுவதிலும் காணப்படும் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு இன்று காலை முதல் இந்த பலத்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

நாட்டை வாங்குமளவு பலம் படைத்த புலம்பெயர் இலங்கையர்கள்

புலம்பெயர் இலங்கையர்களாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் கனிசமான அளவு செல்வாக்கை செலுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி…

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்

அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஷ்…

13 ஐ அமுலாக்குவதில் ஜனாதிபதி பின்வாங்கப்போவதில்லை

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் ரீதியில் தனக்கு பின்னடைவு ஏற்படும் என்றபோதிலும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

புதிய சட்டம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலெனில் ஆதரிக்கமாட்டோம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எனின் அதனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்காது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மக்களின் பாதுகாப்பு, ஊடக பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை…

இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார். நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் பாரத் லால் தலைமையிலான இந்திய தூதுக்குழு 2 நாள் பயணமாக கடந்த 1ம் தேதி இலங்கை சென்றது. இக்குழு, தலைநகர் கொழும்புவில், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவைச்…

மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்

இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைளை…

தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் போகத் தயார்

தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராங்களில் ஒன்றான முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சி ஒன்று நேற்று(3)…

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதைத் தவிர நமக்கு வேறு வழி…

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிய போது அமைச்சரவையில் இருந்து எழுந்து சென்ற அமைச்சர்கள்  இருக்கும்  நாடு இது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார். இன்று நாம் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகின்றோம். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற   ஜனாதிபதி  ஒருவர் இன்று…

கிளர்ச்சியாளர்களை ஒடுக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்படுவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை

இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின்…

அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பதிவு – இலங்கையில் 20 வருட…

அரசங்கத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவது பயங்கரவாத செயற்பாடு, அவ்வாறு பதிவிட்டால் 20 வருடகால சிறைத்தண்டனை. இப்படிப்பட்ட அரசின் பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்யவேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில்…

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! அரசாங்கத்துடன் இணையவுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான உடன்படிக்கை இந்த எம்.பிக்கள் குழு…

வடகிழக்கில் மாபெரும் மக்கள் போராட்டம் – 7 தமிழ் கட்சிகள்,…

வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு 7 தமிழ் கட்சிகள் மற்றும் 22 பொது அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன. நேற்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை – ரணில்

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும்…

கோட்டாபய வீட்டுக்கு அருகே ஏற்பட்ட பதற்றம்: குவிக்கப்பட்ட இராணுவத்தினர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (31-03-2023) முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால்…

ரணிலுடன் இணையும் எதிர்க்கட்சி எம்.பிகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் இணைவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் என்னுடன் பேச்சு நடத்தி வருகின்றனர் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…