இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து…

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளனஇஇருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல…

விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அங்கு செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினருக்கு மாத்திரமே…

எதிர்காலத்தில் ரணில், ராஜபக்ஷக்கள் இணைந்து செயற்படலாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்கால அரசியலில் ரணில்,  ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

இலங்கையின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை தேவை – சர்வதேச மன்னிப்புச்…

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரொஸ் முச்செனா அழைப்பு விடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் உலகின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்திர அறிக்கையின்…

உலக மகிழ்ச்சியில்லா நாடுகளின் பட்டியலில் 112 ஆவது இடத்தில் இலங்கை

அளவுக்கு அதிகமான வளங்கள் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத 10 நாடுகளின் பட்டியல் அறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பால் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் திகதி சர்வதேச மகிழ்ச்சி…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவோருக்கு கடுமையாகும் சட்டம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…

சிங்கள மயமாகிறது நல்லாயன் தமிழ் மகளிர் வித்தியாலயம் – எம்மைக்…

கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் தமிழ் மகளிர் வித்தியாலயத்திற்கு சிங்கள அருட்சகோதரி ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாணவிகளும் அசிரியர்களும் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அதிபராகக் கடமையாற்றும் குறித்த சிங்கள அதிபர் தமிழ் மொழி பேசத் தெரியாதவர் என்பதால், பாடசாலையில் நிர்வாக விடயங்களில் பெரும்…

ஈழத்தினை சுய ஆட்சி கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் என கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் ஆயுத மோதல் முடிவிற்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒரு முழுமையான தீர்வல்ல: டக்ளஸ்…

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துடன்…

கடன் பெற்றுக்கொண்டமைக்கு பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற்று பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கையாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடனைப் பெற்றுக் கொடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சில இடங்களில் பதாகைகளும் கட்டப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெறும் நாடகத்தை…

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவும் – நலேடி பாண்டோர்…

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவுமென அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவிடமே அமைச்சர் நலேடி பாண்டோர்…

இந்திய கடற்தொழிலாளர்களின் வருகையை கண்டித்து மன்னாரில் போராட்டம்

வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை…

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு…

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர்  மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன்,  கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார். ஆளும் கட்சி உறுப்பினரால் தனது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்…

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் –…

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என  சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடும்…

தமிழர்களின் பூர்வீக பகுதிகளை சூறையாடும் அரசு : கவலையில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன்படி தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும் பௌத்த பிரதேசமாக்க…

கோட்டாபயவை விரட்டியடிக்கும்போது மக்கள் கவலையடையவில்லை

நாட்டில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று 2 ஆண்டுகளுக்குள் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போது எந்த கவலையும் தாம் அடையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் (19-03-2023) அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டக் கல்லூரி…

ரணில் இல்லையென்றால் உலக வரைபடத்தில் இருந்து காணாமற்போயிருக்கும் இலங்கை

ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே காரணம் என்று சில தந்திர அரசியல்வாதிகள் கூறினாலும், டொலரின் தேவை மற்றும் விநியோகத்தால் ரூபாயின் மதிப்பு…

ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ்…

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், யுத்தத்தின் பாதிப்புகள் இன்றும் காணப்படுகின்றன. அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற…

இலங்கையில் விமான பயணச்சீட்டுக்களின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் விகிதத்துக்கேற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கும் விமான…

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் அதிபர் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று நடைபெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி…

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது என்று இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார். இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக மீனவர்களின்…

பொருளாதார நெருக்கடி நிலை : நாட்டை விட்டு வெளியேறிய மில்லியன்…

கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி…

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர்,…