நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு டிலான் பெரேரா நியமனம்

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர்  மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன்,  கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார்.

ஆளும் கட்சி உறுப்பினரால் தனது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால் வழிமொழியப்பட்டு குழுவின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் டிலான் பெரேரா இங்கு குறிப்பிட்டார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரசாங்க மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

-if