இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வு

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளனஇஇருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உதவிகளிற்கு இந்த சந்திப்பில் மிலிந்தமொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 

-tw