விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அங்கு செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினருக்கு மாத்திரமே அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலமாக முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம்ட குறித்து, தமக்கு எழுத்து மூலமாக முழுமையான தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியதாகவும், அதற்கான தயார்படுத்தல்களை தாம் மேற்கொண்டதாகவும், மாலை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

 

 

-if