இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவோருக்கு கடுமையாகும் சட்டம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முறைகேடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை உருவாக்க சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

-tw