இலங்கையில் விமான பயணச்சீட்டுக்களின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் விகிதத்துக்கேற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை விமானப் பயணச்சீட்டுகளின் விலை முன்னதகா சுமார் 20 சத வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் விமானப் பயணச்சீட்டுகளின் விலை மேலும் குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

-if