கடன் பெற்றுக்கொண்டமைக்கு பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற்று பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கையாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடனைப் பெற்றுக் கொடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சில இடங்களில் பதாகைகளும் கட்டப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெறும் நாடகத்தை பார்த்து சர்வதேச நாணய நிதியம் சிரிக்க வேண்டும் என வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 48 மாத நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு IMF நிர்வாக சபை இந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது.

“கடந்த காலக் கொள்கை தவறுகள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளின் விளைவாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான நெருக்கடியின் தாக்கம் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிக்கான நாட்டின் அணுகல் தாமதத்தால் ஏற்படும் பொருளாதார செலவுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், ”என்று IMF தெரிவித்துள்ளது.

குழுவின் ஒப்புதல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உட்பட புதிய வெளிநாட்டு நிதியுதவிகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படும் EFF ஏற்பாட்டிலிருந்து இலங்கை இப்போது சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப மானியமாகப் பெற்றுள்ளது.

 

 

-if