ஈழத்தினை சுய ஆட்சி கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் என கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

இலங்கையில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில் இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.

இலங்கையின் நீதிமன்ற கட்டளையினை மீறி தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது .

இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும் குறிப்பாக சிங்களவர்கள் பௌத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட பௌத்த மத ஆலயங்கள் இலங்கை அரச இயந்திரத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே இலங்கைக்கு ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும் , இலங்கையை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும், தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

-if