ஊழல்வாதிகளை காப்பாற்றும் அரசியல்வாதிகள் -மகா நாயக்க தேரர்கள் கடும் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், அவர்கள் மோசடி செய்பவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் அரசியல் புகலிடம் வழங்குவதாகவும் அஸ்கிரிய பீடத்தின் தலைவர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வளவோ அறிவுரை கூறினாலும் பலனில்லை எனவும் அவர் மேலும்…

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை: துளசி

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் அங்கு பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக" அக் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (19.10.2022) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது…

பிரதமராகுவாரா பசில்?- அரச தரப்பிலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இலங்கையில் சில பொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்…

புனர்வாழ்வு மைய யோசனையை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெறவேண்டும் – மனித…

இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் மக்களைத் தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அண்மைய சட்ட வரைவை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று…

இலங்கையில் வாகனங்களின் விலை வீழ்ச்சி

இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமை, உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு வாகனங்களில் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு…

நிரந்தர அரசியல் தீர்வே தமிழர்களின் உயிர் மூச்சு! – முன்னாள்…

"வடக்கு, கிழக்கில் போராலும் இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அதுவே அவர்களின் உயிர் மூச்சாகவும் உள்ளது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த கரு ஜயசூரிய, பல…

2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி…

சரத் பொன்சேகாவை தேடிவந்த பிரதமர் பதவி!

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவர் ஊடாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஜூன் மாதம்…

ரணிலை விரட்டியடிக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள குழு!

சிறிலங்கா அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தோற்கடிப்பது தொடர்பான ஆலோசனையில் சில கட்சிகளின் தலைவர்கள் விவாதங்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரே இந்த வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர். இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம்…

தென்னிலங்கையில் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! நீரில் மூழ்கிய நகரங்கள்

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தும் வகையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது. மண்சரிவு அபாயம்…

இலங்கைக்கு பசுமைப் பொருளாதாரம் தேவை!! ஜனாதிபதி ரணில்

பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைப் பார்த்தால், காலநிலை மாற்றம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது, ஏனென்றால் இன்றைய…

இலங்கையில் வறுமையால் 1 கோடி பேர் பாதிப்பு: ஆய்வில் தகவல்

2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 2019-ம் ஆண்டில் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள்…

போராட்டத்தில் இறங்கும் பெண் எம்.பிக்கள்-சபாநாயகர் பதவிக்கு ஒதுக்கீட்டையும் கோருகின்றனர்

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் பதவிக்கோ அல்லது பிரதி சபாநாயகர் பதவிக்கோ நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது. அரசியலைமைப்பு சாரந்த நிறுவனங்களில் பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டும் அத்துடன் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் ஆணைக்குழுக்கள்…

சனத் நிஷாந்தவை உடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. குற்றச்சாட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் பக்கச்சார்பாக நடந்து கொண்டு…

57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிக்கும்…

டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இலங்கையில் இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. இதற்கிடையே, 99 ஆயிரம் டன் கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல்,…

அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது! சஜித் பிரேமதாச விமர்சனம்

தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சி அதனை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. தேர்தல்களை ஒத்திவைக்க  முயற்சி எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்தல்,…

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா!

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து…

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை

உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், காலநிலை மாற்றம் மற்றும்…

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழலே காரணம் – சர்வதேச நாணய…

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, மீண்டும் மோசடிகள் மற்றும்…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு 29802 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், இது கடந்த ஆண்டை விடவும் 119 வீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம்…

பீனிக்ஸ் பறவைபோல் ராஜபக்சாக்கள் மீண்டெழுவர்

சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சாக்களும் மீண்டெழுவார்களென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். “ஒன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் களுத்துறையிலுள்ள ரோஹித்த அபேகுணவர்த்தனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுஜன…