இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஊழல் மோசடியில் ஈடுபட்டால் வாரண்ட் இன்றி கைது!! இலங்கை அரசாங்கம்…
ஊழலில் ஈடுபடும் எவரையும் பிடி ஆணை இன்றி கைது செய்வதற்கு தேவையான விதிமுறைகளை உருவாக்க அரசு தயாராகி வருகிறது. முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் கீழ் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கைது செய்யும் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் வைக்க முடியும். இதேவேளை, இலங்கைக்கு வெளியில்…
இலங்கையை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் நிறுவனங்களின் தலைவர்கள்
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்களால் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ் நிலையிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. சொத்துக்களை விற்க முயற்சி அத்துடன் மற்றொரு குழுவும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை…
அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க நாம் தயாராக இல்லை –…
அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.…
இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் ரஷ்யா!
ரஷ்யாவிற்கும் கொழும்புவிற்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய, ரஷ்ய தேசிய விமான சேவை ஏரோப்ளோட் நாளை முதல் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Azur Air விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து…
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் நடவடிக்கை! சிறிலங்கா அரசாங்கம்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவித்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த…
அரசாங்கத்தின் மோசடிகளை மறைக்க தீவிர முயற்சி! இரான் விக்ரமரத்ன குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே கோப் குழு தலைவர் பதவியை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியிருப்பதாக இரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கோப் குழு தலைவர் நியமனம் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவிற்கு (கோப் குழு) பெரும்பாலும் எதிர்க்கட்சி…
சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 17-வது இடம்
இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது. கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு…
கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை..! உயர்நீதிமன்றம் அனுமதி: நெருக்கடிக்குள் சிக்கிய ராஜபக்சர்கள்
நாட்டில் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்றைய தினம் (07.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் விசாரணையை முன்னெடுக்க இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி…
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு கடுமையாக்கப்படும் நிபந்தனைகள்
கடனில் இருந்து விடுவிக்க தமது கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய இலங்கையின் செயற்பாடுகளுக்காக தாம் காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஸ்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பணியாளர் மட்ட இணக்கம் ஏற்கனவே கடந்த செப்டெம்பர் முதலாம் திகதியன்று இலங்கையும் சர்வதேச நாணய…
இலங்கையில் பண வீக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் தற்போதைய பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “தற்போது, வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் நாட்டுக்கு…
திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்:சந்திரிகா சீற்றம்
"நாட்டின் ஆட்சியையே தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பைத்தியக்காரர்கள் சிலரின் கைகளிலேயே உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டியே தீருவேன்." என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
விடுதலைப் புலிகளின் தலைவரும் பொட்டு அம்மானும் மரணிக்க வேண்டும் என்பதே…
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்களை இனி வரும் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்…
இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாப்பு விவகாரம் – உலக நாடுகளுக்கு…
இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு போதியளவு இல்லாதமை குறித்து பல உலக நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் மாற்றத்தையும், பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள்…
இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் தூதுவர்கள்: ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். நல்லெண்ணம் அடிப்படையில் பேச்சு வார்த்தை இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி…
அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறையலாம்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதற்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.…
ஆதரவு வீழ்ச்சியால் இலங்கை அதிருப்தி – அமெரிக்கா தலைமையில் மேலும்…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்திற்கு ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும்…
இன்று முதல் தடவையாக கூடும் தேசிய சபை
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர்…
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பானில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இலங்கையின் நலன் விரும்பி ஜப்பான் அதிகாரிகளுடனான சந்திப்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது. இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் அதேவேளை,…
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ந்தும் இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு - அம்பாறை பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப்…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக களமிறங்க மோடிக்கு…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க…
கொழும்பில் திடீர் இராணுவ முகாம்கள்
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி சிறிலங்கா அதிபரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற…
வறுமைக் கோட்டின் கீழ் 26 இலட்சம் குடும்பங்கள்
நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை கலால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 68 இலட்சம் குடும்பங்களில்…
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை குறித்த எச்சரிக்கை விளக்கு சிவப்பு நிறத்திற்கு மாற்றம்
உலக உணவுத்திட்டம், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த எச்சரிக்கை விளக்கை செம்மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 37 வீதமானோர் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் என்றும் 74 வீதமானோர் குறைவான…