இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் – மாபெரும் உணர்வெழுச்சி நினைவேந்தல்!
தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல், இன்று காலை 10 மணியளவில் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் மிக உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. சுதந்திர விடுதலைகோரி தியாகதீபம் திலீபன் ஆகுதியான நினைவிடத்தில் 10.48…
கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவு பௌத்தர்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிர்ப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குருந்தூர்மலை விவகாரம் குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின்…
மரண பயத்தில் வாழும் அரசாங்கம் – சரத் பொன்சேகா
நாட்டில் தற்போது யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை என்பதால், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆட்சியாளர்கள் வெளியில் செல்ல அஞ்சுகின்றனர் பயத்தில்…
சவூதி தேசிய தின நிகழ்வ்வகளில் கலந்து கொண்ட ஞானசார தேரர்
சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் பங்கேற்றுள்ளார். இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர் பங்கேற்றமை…
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோரிக்கை
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) பரிந்துரைக்குமாறு இந்தியாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை கடிதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகதில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவுக்கு முழு உரிமை ''யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள், ஐ.நா…
அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு பின் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என…
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிடைக்கும். தேர்தலுக்கு செல்லக்கூடிய கூடுதலான வாய்ப்பு-பொதுஜன…
இலங்கையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10…
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த…
தெற்கில் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மக்கள்!…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருகின்றார். இந்த நிலையில், வடக்கில் உள்ள மக்கள் தமது சகோதரர்களுடன் தெற்கில் உள்ள கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்…
ஆதரவற்ற குடும்பங்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையினை வழங்கவுள்ள…
அவுஸ்திரேலிய நன்கொடையின் மொத்த AUD 22 மில்லியன் (சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதல் சரக்கு இலங்கைக்கு வந்தடைந்தது, இது தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும். 600 மெட்ரிக் டன் அரிசியை உள்ளடக்கிய இந்த சரக்கு, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல்…
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் பருமனால் அவதிப்பட்டால், அவர்கள் உயிரிழக்க கூட நேரிடும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் 10 குடும்பங்களில் 04 வீடுகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை…
திரிபோஷாவில் நச்சுத்தன்மை இருப்பது உண்மை..! மீள பெறும் நடவடிக்கைகள் தீவிரம்
நாடளாவிய ரீதியில் விநியோகப்படும் திரபோஷாக்களில் அஃப்லடொக்சின் எனும் நச்சுத்தன்மை இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,…
ஒன்றாய் எழுவோம்..! சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு…
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை காலி முகத்திடலில் முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ஒன்றாய் எழுவோம்“ என்ற தொனிப்பொருளில் 75 ஆவது சுதந்திர தினம் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபர் ஊடகப்பிரிவு அதிபர் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில்…
மரண தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியுமாயின் அரசியல் கைதிகளுக்கு…
எத்தனையோ கொலைக் குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியுமாயின் அரசியற் கைதிகளின் விடயத்தில் மாத்திரம் ஏன் பாரபட்சம் காட்டப்படுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வெலிகடை சிறைச்சாலை அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு…
உணவை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை
இலங்கையில் நிலவும் உணவுப்பாதுகாப்பின்மை காரணமாக சில குடும்பங்கள் உணவை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. இலங்கையில் உணவுப்பாதுகாப்பு நிலைமை ஸ்திரமற்றதாகவே இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் வீட்டு உணவுப்பாதுகாப்பு ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்…
இலங்கை பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு அமைச்சர் வேண்டுகோள்
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுகின்றன. விமான சேவை "நாங்கள் சாலையில்…
உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! எச்சரிக்கும் சபாநாயகர்
நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். காலி - அபரகட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலைமைகள் தீவிரமடையும் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் அழுத்தங்கள் தற்காலிகமாக குறைந்துள்ள…
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை!
இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மதகுருமார்கள், மூவின…
யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு! 134 பேருக்கு…
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய, யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமை போதைப்பொருள் பாவனைக்கு…
பல மில்லியன்களை பெற்ற தாமரைக்கோபுரத்தின் மூன்றுநாள் வருமானம்!
கொழும்பில் உள்ள திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் தாமரைக் கோபுரத்திற்கு கிடைத்த மொத்த வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று…
சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள்: துரித…
உக்ரேனின் கார்கிவ் பகுதியில் பொதுமக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கை மாணவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. சித்திரவதை அறைகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த…
மாபெரும் போராட்டம் வெடிக்கும் -இலங்கை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கடும்…
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஆசிரியர்களுக்குப் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாட்டில் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணத்தை அனுபவிப்பதுடன் மக்களின் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
பணப்பற்றாக்குறை -கடும் நெருக்கடியில் அரச நிறுவனங்கள்
பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களைக்…