இலங்கையை ச‌ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோரிக்கை

இலங்கையை ச‌ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) பரிந்துரைக்குமாறு இந்தியாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை கடிதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகதில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவுக்கு முழு உரிமை

”யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள், ஐ.நா உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி இருக்கின்றோம்.

இந்தியா ஐ.நா மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பினர் மட்டுமல்லாது அதில் நமது சக்தி வாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

ஈழத்தமிழர்களது இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டிருப்பதுடன் சிறிலங்கா உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட நமது அவல நிலையை பற்றி சிறந்த அறிவையும் புரிதலையும் அறிந்துள்ளது.

ஐ.நாவின்  பரிந்துரை

இவ்வாறான பின்னணியில், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பது போல், இலங்கை பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் தற்போது இலங்கை தொடர்பான வரவு தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த வரைப்பு தீர்மானத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் பரிந்துரை உள்ளடக்கி இருக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.’

-ibc