அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே கோப் குழு தலைவர் பதவியை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியிருப்பதாக இரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோப் குழு தலைவர் நியமனம்
பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவிற்கு (கோப் குழு) பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களே தலைவர்களாக நியமிக்கப்படுவது சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கோப் கமிட்டி தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன முன்னிறுத்தப்பட்ட போதும் அரசாங்கத்தின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழு தலைவராக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரான் விக்ரமரத்ன, அரசாங்கம் சம்பிரதாயங்களை மீறி ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரையே கோப் கமிட்டிக்கு தலைவராக நியமித்துக் கொண்டுள்ளது.
அதன் அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் தீவிர முயற்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
கோப் குழுவின் அங்கத்தவர்களாக அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கவனித்துப் பார்க்கும் போது இந்த விடயம் மேலும் உறுதியாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-ibc