“நாட்டின் ஆட்சியையே தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பைத்தியக்காரர்கள் சிலரின் கைகளிலேயே உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கட்டியே தீருவேன்.” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலை
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,“எனது தந்தை, தாய் வளர்த்தெடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் இறுதி வரையில் பாதுகாத்தே வந்தேன். ஆனால், இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கின்றது.
கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை
மனநோயாளர் விடுதிகளில் இருக்க வேண்டியவர்கள் இன்று கட்சியின் தலைமைப் பதவிகளில் இருக்கின்றனர். இந்த கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. கட்சியின் கொள்கைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் திறமைமிக்க பலர் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். அனைத்துக்கும் விரைவில் முடிவு கட்டியே தீருவேன்” என கூறியுள்ளார்.
-tw