இலங்கையை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் நிறுவனங்களின் தலைவர்கள்

இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்களால் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ் நிலையிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

சொத்துக்களை விற்க முயற்சி

அத்துடன் மற்றொரு குழுவும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு செல்வதற்கு முன்னர் இந்த நாட்டில் உள்ள சொத்துக்களை விற்க முயற்சித்த போதிலும், கொள்வனவு செய்பவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளமையால் அது பிரச்சினையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

-ibc